அதே ரத்தம் அப்டிதான் இருக்கும்.. தல மாதிரியே குட்டி தலயும் செமஅழகு.. திருஷ்டி சுத்தி போடுங்க ஷாலினி
அஜித் மகன் ஆத்விக்கின் புகைப்படம் ஒன்று வைரலாகியுள்ளது.
Recommended Video
சென்னை: அஜித்தின் மகன் ஆத்விக்கின் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
பல முன்னணி நடிகர்கள் எப்போதுமே தங்களது குடும்பத்தினர் மீது ஊடக வெளிச்சம் படாதவாறு பார்த்துக் கொள்வது வாடிக்கைதான். ஆனால் பொது இடங்களுக்கு அவர்கள் வரும் போது, ரசிகர்கள் எடுக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி விடும்.

நடிகர் அஜித்தின் குடும்பப் படங்களும் அப்படித்தான். தனது மகள் மற்றும் மகனை அவர் எந்த பொது விழாக்களுக்கும் அழைத்து வருவதே இல்லை. ஆனால், அவ்வப்போது விமான நிலையத்தில் மற்றும் ஷாப்பிங் செய்த போது ஷாலினியுடன் அவர்கள் இருக்கும் புகைப்படம் வெளியாகி விடும்.
ரசிகர்கள் கேட்டுக் கொண்டால் அஜித்தைப் போலவே அவரது மனைவியும், நடிகையுமான ஷாலினியும் ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த மாதிரி சமயங்களில் குழந்தைகளையும் அவர் உடன் வைத்துக் கொண்டு தான் புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கிறார்.
அப்படியாக சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில், ஷாலினியுடன் குட்டி தல ஆத்விக் உள்ளார். ஜீன்ஸ் மற்றும் சட்டையில் செம அழகாக அதில் ஆத்விக் இருக்கிறார். அஜித்தைப் போலவே செம ஹேண்ட்சம்மாக ஆத்விக் இருப்பதாக தல ரசிகர்கள் இணையத்தில் இந்தப் புகைப்படத்தை பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











