அபிநயாவுடன் ‘வாலி’ ஸ்டைலில் பேசும் அஜீத்
சென்னை: வீரம் படத்தில் தன்னுடன் நடித்து வரும் அபிநயாவுடன் வாலி திரைப்பட ஸ்டைலில் பேசிக் கொள்கிறாராம் அஜீத்.
'ஆரம்பம்' படம் விரைவில் வெளியாக் உள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் 'வீரம்' என்ற படத்தில் நடித்து வருகிறார் அஜீத். இப்படத்தில் அஜீத்தின் ஜோடி தமன்னா.
இவர்களுடன் சந்தானம், விதார்த், அபிநயா ஆகியோரும் நடிக்கிறார்கள். இசை தேவி ஸ்ரீ பிரசாத். படத்தை பொங்கலுக்கு வெளியிடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடோடிகள் அபிநயா....
நாடோடிகள் படம் மூலம் பல்லாயிரக்கணக்கான தமிழ் ரசிகர்களைப் பெற்றவர் நடிகை அபிநயா. பிறவியிலேயே வாய் பேச முடியாத, காது கேளாதவராக இருந்தாலும், அந்தக் குறை சற்றும் தெரியாமல், மிகுந்த தன்னம்பிக்கையுடையவர் அவர்.

நடிப்பால் கவரும் அபி....
தற்போது வீரம் படத்தில் விதார்த்துக்கு ஜோடியாக அபிநயா நடிக்கிறாராம். படத்தில் ஒரு சில காட்சிகளில்மட்டுமே வந்தாலும், தன்னுடைய சிறப்பான நடிப்பால் அனைவரையும் கவர்கிறாம் அபிநயா.

அசந்து போன அஜீத்....
அபிநயாவின் நடிப்பைப் பார்த்து அசந்து போன அஜீத், இயக்குநரிடம் அவரது காட்சிகளை அதிகப்படுத்தும் படி வேண்டுகோள் விடுத்துள்ளாராம்.

வாலி பாஷை....
மேலும், வாலி படத்தில் வரும் இரு கதாபாத்திரத்தில் ஒன்றில், வாய் பேச முடியாத, காது கேளாதவராகவும் நடித்தவர் அஜீத். அந்த அனுபவத்தின் மூலம் படப்பிடிப்பில் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் ‘வாலி' பாஷையில் அபிநயாவுடன் பேசி நேரத்தைச் செலவிடுகிறாராம் அஜீத்.


Click it and Unblock the Notifications











