Good Bad Ugly: பக்தர்கள் அமைதி காக்கவும்.. சர்வர் கோளாறு.. குட் பேட் அக்லி டிரைலர் சிக்கல்

சென்னை: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். சர்வர் கோளாறால் குட் பேட் அக்லி டிரைலர் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு தயாரிப்பு நிறுவனம் பொறுமை காக்க வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, அர்ஜூன் தாஸ், சுனில் ஆகியோர் நடித்திருக்கும் படம் குட் பேட் அக்லி. இப்படம் வரும் 10ஆம் தேதி வெளியாக இருப்பதால் படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. படம் குறித்த அப்டேட்டுகளையும் இயக்குநர் ஆதிக் அள்ளித் தெளித்து வருகிறார். இவர் ஒரு பக்கம் எதிர்பார்ப்பை எகிற வைத்தாலும், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெறிக்க விடுகிறார். இசையும் பாட்டும் வெயிட்டா இருக்கும் என கூறியுள்ளார்.

ajith-starrer-good-bad-ugly-movie-trailer-release

முன்பு வெளியான படத்தின் டீசரில் வாலி, வேதாளம், அட்டகாசம், காதல் மன்னன், அமர்க்களம் படத்தில் உள்ள கெட்டப்புகளில் வந்து கலக்கியிருந்தார் அஜித். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படம் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ளது. குட் பேட் அக்லி படத்தை மனி ஹெய்ஸ்டோடு ஒப்பிட்டு பேசப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து இன்று இரவு 9.01 மணிக்கு படத்தின் டிரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சர்வர் பிரச்னையால் டிரைலர் வெளியாவதில் தாமதம் ஆவதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது. மேலும், மாஸ் சம்பவம் ரெடியாக இருக்கிறது கொஞ்சம் காத்திருங்கள் என தெரிவித்தது. இதற்காகவே கண்கொத்தி பாம்பை போல் காத்திருந்த ரசிகர்கள் அஜித்தை விட டிரெண்டிங்கில் மாஸ் சம்பவம் செய்து வருகின்றனர்.

ajith-starrer-good-bad-ugly-movie-trailer-release

டிரைலர் வெளியாவதில் சிக்கல்: பொறுமை இழந்த ரசிகர்கள்: என்னதான் ஆச்சு ஏன் இப்படி செய்கிறீர்கள் எவ்வளவு ஆசையாக இருந்தோம் தெரியுமா என கேள்விகளை கேட்டு வருகின்றனர். அஜித் படங்கள் வெளியாகும் போது இதே பிரச்னை தான் வருகிறது. படத்தின் டிரைலருக்கு இதே பிரச்னை என்ன பாஸ் பன்றது என கலாய்க்க தொடங்கிவிட்டனர். அஜித் படத்தின் டிரைலர் மற்றும் டீசர் வெளியாகும் நேரத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருவதாக அவரது ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு நடிகருக்காக இப்படி ஹைப் ஏற்படுத்துவதை தவிர்க்கவும் என நெட்டிசன்கள் கமாண்ட் போட்டுள்ளனர். தயாரிப்பு நிறுவனம் பொறுமை காத்திருக்கவும் என தெரிவித்ததை கூறி ரசிகர்கள் கமெண்ட் அடிக்க தொடங்கிவிட்டனர்.

கலாய்த்த நெட்டிசன்கள்: விடாமுயற்சி படத்தின் டிரைலர் வெளியிடுவதில் இதே சிக்கல் நீடித்ததாகவும், விஸ்வாசம், விவேகம் படத்திற்கும் இதுமாதிரிதான் செய்தனர் என்று குறைகூற தொடங்கிவிட்டனர் நெட்டிசன்கள். குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் வெளியாகும் நேரம் மாற்றப்பட்டதால் ரொம்ப பொறுமை இழந்திருக்கிறோம் கொஞ்சம் கருணை காட்டுங்க அய்யா என்றும் கலாய்த்துள்ளனர். ஏன் அஜித் படத்திற்கு மட்டும் இந்த பிரச்னை தொடர்கிறது. இதை முன்கூட்டியே தெரிந்து சரிசெய்வது நல்லது தானே என்றும் நெட்டிசன்கள் கேட்கின்றனர். இன்று இரவு 9.01 மணிக்கு வெளியாக வேண்டிய டிரைலர் காலம் தாமதமாக 9.10 மணி்ககு டிரைலர் வெளியானது. வெளியான அடுத்த கனமே ரசிகர்கள் கொண்டாட தொடங்கிவிட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X