தல அஜித்தின் 'வாலி', 'வரலாறு' பற்றி தீயாகப் பரவிய தகவல்.. வேகமாக மறுத்த தயாரிப்பு தரப்பு!

By

சென்னை: அஜித்தின் வாலி, மற்றும் வரலாறு படங்கள் இந்தியில் ரீமேக் ஆக இருப்பதாக வந்த தகவலை அதன் தயாரிப்பு தரப்பில் மறுத்துள்ளனர்.

Recommended Video

தல Ajith unseen Drone Training Video • Dhaksha Team

நடிகர் அஜித், 'வலிமை' படத்தில் நடித்து வருகிறார் இப்போது. போலீஸ் அதிகாரி கேரக்டர்.

அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை'யை அடுத்து இந்தப் படத்தையும் ஹெச்.வினோத் இயக்கி வருகிறார்.

ஹூமா குரேஸி

ஹூமா குரேஸி

ஶ்ரீதேவியின் கணவரும் இந்திப் பட தயாரிப்பாளருமான, போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். அஜித் ஜோடியாக இந்தி நடிகை ஹூமா குரேஸி நடிப்பதாகக் கூறப்படுகிறது. இவர் ரஜினிகாந்தின் 'காலா' படத்தில் நடித்திருந்தார்.
தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடிக்கிறார். 100 படத்தில் அதர்வாவுக்கு வில்லனாக நடித்த ராஜ் ஐயப்பாவும் இதில் மற்றொரு வில்லன்.

வெளிநாட்டில் ஷூட்டிங்

வெளிநாட்டில் ஷூட்டிங்

இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடந்து வந்தது. பின்னர் படக்குழு சென்னைத் திரும்பியது. அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. பின்னர் வெளிநாட்டில் படப்பிடிப்பை நடத்தவும் திட்டமிட்டிருந்தனர். கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்புத் தடைப்பட்டுள்ளது. வெளிநாட்டுத் திட்டமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது..

ரீமேக் உரிமை

ரீமேக் உரிமை

இதற்கிடையே, அஜித் நடித்து சூப்பர் ஹிட்டான 'வாலி' படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட இருப்பதாகவும் அதற்கான உரிமையை போனி கபூர் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாயின. கே.எஸ்.ரவிகுமார் நடிப்பில் அஜித் நடித்த வரலாறு படத்தின் உரிமையையும் அவர் பெற்றுள்ளதாகவும் செய்திகள் வெளியாயின. இந்த படங்களைத் தயாரித்தவர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி.

உண்மை இல்லை

உண்மை இல்லை

அவர் தரப்பில் விசாரித்தபோது, இதில் உண்மை இல்லை என்றனர். போனி கபூர் தரப்பிலும் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் 'வலிமை' படத்தை இந்தியில் டப் செய்து வெளியிட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் படங்களை இந்தியில் டப் செய்ய சிலர் கேட்டு வருவதாகவும் இந்தி டப்பிங் மார்க்கெட் அஜித்துக்கு நன்றாக இருப்பதால் 'வலிமை'யை அவர் டப் செய்து வெளியிட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X