200 பேருடன் செல்பி.... ‘தல’ போல வருமா?
நடிகர் அஜித் 200க்கும் மேற்பட்டோருடன் செல்பி எடத்துக்கொண்டார்.
சென்னை: ஹைதராபாத்தில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் அஜித், தான் பயணம் செய்த விமானத்தின் பைலட் உட்பட சுமார் 200க்கும் மேற்பட்டோருடன் செல்பி எடுத்து அசர வைத்துள்ளார்.
மிகப்பெரிய கட்சித் தலைவர்கள், நடிகர்கள் என பலரும் சமீபகாலமாக தங்களுடன் செல்பி எடுக்க முயன்ற ரசிகர்கள் அடித்து சர்ச்சையில் சிக்கி வருகின்றனர். இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வைரலாகப் பரவியது.
இந்நிலையில், வழக்கம்போல் சத்தமில்லாமல் ஒரு சாதனையை செய்துள்ளார் நடிகர் அஜித்.

விஸ்வாசம்:
வீரம், வேதாளம், விவேகம் வெற்றிப்படங்களைத் தொடர்ந்து சிறுத்தை சிவாவுடன் நான்காவது முறையாக நடிகர் அஜித் கூட்டணி சேர்ந்துள்ளார். 'V' வரிசையில் விஸ்வாசம் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது.

விமானப் பயணம்:
படப்பிடிப்பை முடித்து நடிகர் அஜித் விமானம் மூலம் சென்னை திரும்பினார். அப்போது, அவர் பயணம் செய்த விமானத்தின் பைலட் உட்பட ரசிகர்கள் பலரும் அவருடன் செல்பி எடுக்க ஆசைப்பட்டுள்ளனர்.

200க்கும் மேற்பட்டோர்:
அதற்கு அஜித்தும் சம்மதம் தெரிவித்து, சளைக்காமல் அனைவருடனும் போஸ் கொடுத்துள்ளார். அன்றைய தினம் மட்டும் விமான நிலையத்தில் வைத்து சுமார் 200க்கும் மேற்பட்டோருடன் அவர் செல்பி எடுத்துள்ளார்.
டிவிட்டர் பதிவு:
அஜித்துடன் செல்பி எடுத்துக் கொண்ட ரசிகர்களில் இசையமைப்பாளர் தமனும் ஒருவர். இது தொடர்பாக தமன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,‘அஜித் போன்ற ஒருவருடன் பழகியது இனிய அனுபவம். இன்று மட்டும் அவருடன் 100 முதல் 200க்கும் மேற்பட்டோர் செல்பி எடுத்துக் கொண்டனர்' எனத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











