முதன்முறையாக அஜித்தே எடுத்துக் கொடுத்த செல்பி.. ஒவ்வொரு ரசிகர் முகத்திலும் என்னா சந்தோசம் பாருங்க!
நடிகர் அஜித் முதல் முறையாக ரசிகர்களுடன் செல்பி எடுத்துள்ளார்.
சென்னை: நடிகர் அஜித் முதல் முறையாக ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித்துக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். ரசிகர் மன்றங்களை அவர் கலைத்துவிட்டாலும், இன்னும் பல ஊர்களில் அவரது ரசிகர்கள் ஆக்டிவாக இயங்கிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

இதனால் அஜித் எங்கு சென்றாலும் அந்த இடத்தில் ரசிகர்கள் அவரை சூழ்ந்துகொள்வது வழக்கம். சில நேரம் விமான நிலையத்தில் இருந்து அவர் வெளியே வர முடியாத நிலைகூட ஏற்பட்டிருக்கிறது.
அஜித் பொதுவாக ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொள்வதில்லை. எப்போதாவது விமான பயணத்தின் போதோ அல்லது படப்பிடிப்பின் போதோ மற்றவர்கள் கேட்டால், செல்பிக்கு போஸ்மட்டுமே கொடுப்பார். ஆனால் அவர் போனை பிடித்து செல்பி எடுக்க மாட்டார்.
இந்நிலையில் முதல் முறையாக நடிகர் அஜித் தனது ரசிகர்களுடன் செல்பி எடுத்துள்ளார். ஏகப்பட்ட ரசிகர்கள் பின்னால் இருக்க, அவரே போனை வாங்கி செல்பி எடுத்துக் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் தங்களுடைய பேன் பேஜில் பகிர்ந்து வருகின்றனர்.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி ரிலீசாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications