அடுத்த ஆட்டத்திற்கு தயார்.. டெல்லியில் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் அஜித்.. வைரலாகும் போட்டோ!

நடிகர் அஜித் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தேசிய அளவில் நடக்க கூடிய போட்டிகளில் விரைவில் கலந்து கொள்ள இருக்கிறார் என்று தகவல்கள் வருகிறது.

Recommended Video

வாவ்.. நம்ம 'தல'யா இது..செம ஹேன்ட்சம்! வைரலாகும் நியூ லுக்! | Ajith New Look Photos viral

சென்னை: நடிகர் அஜித் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தேசிய அளவில் நடக்க கூடிய போட்டிகளில் விரைவில் கலந்து கொள்ள இருக்கிறார் என்று தகவல்கள் வருகிறது.

நடிகர் அஜித் நடிப்பு மட்டுமில்லாமல் நிறைய தனித்திறமைகளை கொண்டவர். நன்றாக புகைப்படம் எடுப்பார், நன்றாக துப்பாக்கி சுடுவார்.

அதேபோல் இவருக்கு டிரோன் ரக ஏரோபிளேன்களை தயாரிக்க பிடிக்கும். மிக முக்கியமாக இவர் பைலட் லைசன்ஸ் வைத்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தீவிரம்

தீவிரம்

இந்த நிலையில் தற்போது இவர் துப்பாக்கி சுடும் போட்டியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். சில வாரங்கள் முன் கோவையில் நடந்த State Rifle Championship 2019ல் கலந்து கொண்டு அஜித் கலக்கினார். இதில் நன்றாக விளையாடியதன் மூலம் இவர் சென்னை ரைஃபில் கிளப் சார்பில் அஜித்குமார் 25 மீட்டர் பிரிவில் கலந்து கொண்டார்.

இப்போது எப்படி

இப்போது எப்படி

இதில் இவர் பெற்ற புள்ளிகள் குறித்த விவரமும் இணையத்தில் வெளியானது. இந்த நிலையில் தற்போது மீண்டும் துப்பாக்கி சுடுதலில் தீவிரமாக செயல்பட தொடங்கி உள்ளார். இந்த முறை தேசிய அளவில் இவர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார்.

டெல்லி சென்றார்

இதற்காக இவர் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறார். அங்கு இருக்கும் டாக்டர் கர்னி சிங் ஷூட்டிங் ரேஞ்சில் இவர் பயிற்சி எடுத்தார். ஆம், இந்த முறை சென்னையில் பயிற்சி எடுக்காமல் டெல்லி வரை சென்று பயிற்சி எடுத்துள்ளார். டெல்லியில் உள்ள டாக்டர் கர்னி சிங் ஷூட்டிங் ரேஞ்சில் இவர் பயிற்சி எடுத்தார்.

தேசிய அளவு

தேசிய அளவு

இதற்காக அவர் டெல்லியில் ஒருவாரம் இருந்தார். இன்றுதான் இவர் டெல்லியில் இருந்து சென்னை வந்தார். ஆகவே விரைவில் நடிகர் அஜித் தேசிய அளவில் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.

More from Filmibeat

Read more about: ajith அஜித்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X