Ajith: ரசிகரின் தோள் மீது கை போட்டு... அஜித் செஞ்ச காரியமா இது... ட்ரெண்டாகும் வீடியோ!

சென்னை: அஜித்தின் ஏகே 62 பட அப்டேட்டுக்காக ரசிகர்கள் வழி மீது விழி வைத்து காத்திருக்கின்றனர்.

லைகா தயாரிக்கவுள்ள இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், அஜித்தின் பைக் டூர் வீடியோ ஒன்று டிவிட்டரில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், அஜித்தா இது என ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.

 Ajith talking to a fan with his hand on his shoulder is trending

அஜித்தின் ட்ரெண்டிங் வீடியோ:அஜித்தின் துணிவு திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதனைத் தொடர்ந்து அஜித் நடிக்கவுள்ள ஏகே 62 படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. லைகா தயாரிக்கும் இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். ஆனாலும் இதுகுறித்த அபிஸியல் அப்டேட் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அஜித்தின் பைக் டூர் வீடியோ ஒன்று டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. அஜித் எப்போதுமே தனது ரசிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் சமரசம் செய்துகொள்ளமாட்டார். அவர்களின் நலனுக்காகவே தனது ரசிகர் மன்றங்கள் அனைத்தையும் ஒரே இரவில் கலைத்துவிட்டார் அஜித். ஆனால், வெளியே செல்லும் போது ரசிகர்கள் சந்தித்தால் அவர்களை அருகில் அழைத்து போட்டோ எடுத்துக் கொள்கிறார்.

அதேபோல், பைக் டூர் சென்ற இடங்களிலும் அஜித்துக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் மலேசியா சென்றிருந்த அஜித், அங்கு வழக்கம் போல பைக்கில் ரவுண்டு அடித்துள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் அஜித்தின் பைக் அருகே சென்று அவருடன் பேசிக் கொண்டிருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் அஜித்தின் பைக் ஆக்சிலேட்டரையும் திருகியபடி அவரிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறார்.

 Ajith talking to a fan with his hand on his shoulder is trending

அப்போது அஜித் அந்த ரசிகரின் தோள் மீது கை போட்டுக் கொண்டு பிரண்ட்லியாக அவரிடம் பேசிக்கொண்டிருக்கிறார். ஹெல்மெட், பைக் டூர் காஸ்ட்யூம் உடன் ரொம்பவே கூலாக அந்த ரசிகருடன் அஜித் பேசிக்கொண்டிருப்பது பலரையும் வியக்க வைத்துள்ளது. அதுவும் அஜித்தின் பைக்கை ஒருவித ஆசையுடன் அந்த ரசிகர் தொட்டுப் பார்ப்பதை, அஜித்தும் சைலண்டாக ரசித்துப் பார்க்கிறார். இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

இதனிடையே, ஏகே 62 ஸ்க்ரிப்ட் வேலைகளை மகிழ் திருமேனி முழுவதும் முடித்துவிட்டதாக சொல்லப்படுகிறது. மேலும், மொத்தமே 45 நாட்களில் படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட திட்டமிட்டுள்ளாராம். இதனால் அஜித்தின் பிறந்தநாள் தினமான மே 1ம் தேதி ஏகே 62 அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X