ரஜினி பற்றி பேசிய அஜித்.. வைரலாகும் வீடியோ.. இந்த மனசுதான் உங்களை உயரத்துக்கு கொண்டு போயிருக்கு தல!

ரஜினி பற்றி அஜித் பேசிய வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.

Recommended Video

ரஜினி பற்றி பேசிய அஜித்.. வைரலாகும் வீடியோ..

சென்னை: நடிகர் ரஜினி பற்றி அஜித் பேசிய வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு வழியை அமைத்துக் கொண்டு செயல்பட்டு வருபவர்கள் ரஜினியும், அஜித்தும். இருவருமே சினிமாவைத் தாண்டி ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு காட்டுபவர்கள்.

Ajith talks about Rajini; Viral video

இருவருமே தாங்கள் மற்றவர்களுக்கு செய்யும் உதவிகள் மற்றவர்களுக்குத் தெரியக்கூடாது என்பதில் கவனமாக செயல்படுபவர்கள்.

இந்நிலையில் அஜித், நடிகர் ரஜினி பற்றி பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

அந்த வீடியோவில் அஜித்தைப் பார்க்கும் போது நிச்சயம் அது ஆசை, காதல் மன்னன் பட சமயங்களில் எடுக்கப்பட்ட வீடியோவாகத்தான் இருக்கும் எனத் தெரிகிறது. அந்தளவிற்கு வீடியோவில் மிக இளமையாகக் காணப்படுகிறார் அஜித்.

அதோடு கடந்த சில ஆண்டுகளாகவே ஊடகங்களுக்கு அவர் பேட்டி தருவதில்லை. தனது பட புரொமோசன்களிலும் அவர் கலந்து கொள்வதில்லை. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது இது பழைய வீடியோ தான் எனத் தெரிகிறது.

அந்த வீடியோவில் ரஜினி செய்யும் நல்ல விசயங்கள் குறிப்பாக, தான தர்மங்களை குறிப்பிட்டு பேசியிருக்கிறார் அஜித். மிகவும் கஷ்டப்பட்டு நல்ல நிலைக்கு உயர்ந்த ரஜினி, மற்றவர்களுக்கு உதவுவது போல் கண்டிப்பாக நானும் வருங்காலத்தில் நல்லதையே செய்வேன்' எனப் பேசுகிறார்.

இந்த வீடியோவை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வரும் அஜித் ரசிகர்கள், "தல சொன்னது மாதிரியே செஞ்சிட்டு வர்றார். அவரோட நல்ல மனசுக்குத் தான் கடவுள் இவ்வளவு நல்ல உயரத்தைத் தந்திருக்கிறார்" எனப் பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X