லடாக்கில் தொடர் சுற்றுப்பயணம்.. கோயிலில் வழிபாடு செய்த அஜித்.. வெளியான வீடியோ!
சென்னை : நடிகர் அஜித்குமார் அடுத்தடுத்த சிறப்பான படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார்.
ஹெச் வினோத், போனிகபூருடன் மூன்றாவது முறையாக இணைந்து அஜித் நடித்துவரும் படம் ஏகே61.
இந்தப் படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில தினங்களில் படக்குழுவினர் அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக பாங்காக் செல்லவுள்ளனர்.

அஜித்தின் ஏகே61 படம்
நடிகர் அஜித்குமார், மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வருகிறது ஏகே61 படம். இந்தப் படத்தின் சூட்டிங் ஐதராபாத், விசாசப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பூனாவில் நடைபெறவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அந்தத் திட்டத்தில் படக்குழு மாற்றம் செய்துள்ளது.

பாங்காக்கில் அடுத்தக்கட்ட சூட்டிங்
அடுத்ததாக ஏகே61 படக்குழு பாங்காக் செல்லவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் பாங்காக் செல்லும் படக்குழு, அங்கு மொத்தமாக 3 வாரங்களுக்கு படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து படத்தின் நாயகி மஞ்சு வாரியரும் சமீபத்திய பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார்.

அஜித் பிரிட்டன் பயணம்
இந்தப் படத்தின் முதல் கட்ட சூட்டிங் ஐதராபாத்தில் பேங்க் மற்றும் மவுண்டரோடு ஆகிய பிரம்மாண்டமான செட்கள் போடப்பட்டு அதிகமான நாட்கள் நடத்தப்பட்டன. ஆனால் தொடர்ந்து அடுத்தக்கட்ட சூட்டிங் தாமதமானது. இதையடுத்து நடிகர் அஜித்குமார் பிரிட்டனுக்கு பயணமானார். அங்கு பைக் ரேசிங் உள்ளிட்டவற்றில் அவர் பங்கேற்ற வீடியோக்கள் பகிரப்பட்டு வைரலாகின.

பாங்காக்கில் அடுத்தக்கட்ட சூட்டிங்
இதையடுத்து படத்தின் சூட்டிங் விசாகப்பட்டினத்தில் நடத்தப்பட்டது. தொடர்ந்து மீண்டும் அடுத்தக்கட்ட சூட்டிங்கில் இடைவெளி ஏற்பட்டுள்ளது. நிதி நெருக்கடி காரணமாக படத்தின் சூட்டிங் தள்ளிப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தற்போது மீண்டும் இன்னும் சில தினங்களில் பாங்காக்கில் சூட்டிங் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் லடாக் பயணம்
இதனிடையே லடாக் உள்ளிட்ட பகுதிகளில் நடிகர் அஜித் தன்னுடைய பயணத்தை கடந்த சில தினங்களில் நடத்தியுள்ளார். அங்கு பலதரப்பட்ட மக்களை சந்தித்துள்ளார். ரசிகர்களுடன் புகைப்படங்கள் எடுத்துள்ளார். மேலும் பைக் ரேசிங் உள்ளிட்டவற்றிலும் ஈடுபட்டார். அவர் ஆறுகளுக்கு இடையில் பைக் ஓட்டியதையும் பார்க்க முடிந்தது.

கோயிலில் அஜித் வழிபாடு
இந்நிலையில் தற்போது லடாக்கில் உள்ள புத்தர் கோயிலில் அவர் வழிபாடு செய்துள்ளார். இந்த கோயிலில் அஜித் சாமி தரிசனம் செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மிகவும் சிரத்தையாக சாமியை தரிசனம் செய்து கும்பிடுகிறார் அஜித்.


Click it and Unblock the Notifications











