Ajith: அஜித் - ஷாலினி நடுவில் க்யூட்டாக எட்டிப் பார்க்கும் ஆத்விக்... லைக்ஸ் சும்மா அள்ளுதே
சென்னை: கோலிவுட் டாப் ஹீரோ அஜித் தற்போது பைக் ட்ரிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார்.
விரைவில் லைகா தயாரிக்கும் தனது 62வது படமான விடாமுயற்சியில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், பைக் ட்ரிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய அஜித், தனது குடும்பத்தினருடன் அவுட்டிங் சென்றுள்ளார்.

அப்போது அஜித், ஷாலினி, ஆத்விக் ஆகியோர் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது.
அஜித்துடன் க்யூட் லுக்கில் ஆத்விக்
அஜித்தின் துணிவு திரைப்படம் இந்தாண்டு பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகியிருந்தது. அஜித் - ஹெச் வினோத் கூட்டணியில் வெளியான இந்தப் படம், ரசிகர்களின் வரவேற்போடு 300 கோடிக்கும் மேல் வசூலித்தது. இதனைத் தொடர்ந்து அஜித்தின் ஏகே 62 படத்தை லைகா தயாரிக்கிறது. மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்திற்கு விடாமுயற்சி என்ற டைட்டில் கன்ஃபார்ம் ஆகியுள்ளது.
அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி விடாமுயற்சி டைட்டில் அறிவிக்கப்பட்டது. அதேநேரம் நேபாளம், பூடான் என தனது பைக் ட்ரிப்பில் பிஸியாக இருந்தார் அஜித். இதனால், அஜித் இல்லாமலேயே விடாமுயற்சி டைட்டில் குறித்து படக்குழு அறிவித்தது. அஜித் சென்னை திரும்பியதும் விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கும் என செய்திகள் வெளியாகின. இந்நிலையில், அஜித் தற்போது சென்னை திரும்பிவிட்டதாக தெரிகிறது.
சென்னை வந்த உடனேயே தனது குடும்பத்தினருடன் அவுட்டிங் சென்றுள்ளார் அஜித். சென்னையில் உள்ள பிரபலமான உணவகத்தில் தனது மனைவி ஷாலினி, மகன் ஆத்விக் ஆகியோருடன் சாப்பிட சென்றுள்ளார் அஜித். அப்போது ஹோட்டல் ஊழியர்கள் அஜித், ஷாலினி ஆகியோருடன் புகைப்படங்கள் எடுத்துள்ளனர். அதேபோல், அஜித்தும் ஆத்விக்கும் இணைந்து செம்ம க்யூட்டான ஒரு போட்டோ எடுத்துள்ளனர்.
அஜித் - ஷாலினி இருவரும் ஹோட்டல் ஊழியர்களுடன் இருக்கும் புகைப்படமும், அஜித்தும் ஆத்விக்கும் இருக்கும் இன்னொரு போட்டோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படங்களில் அஜித் ஃபுல் Black and Black காஸ்ட்யூமில் செம்ம மாஸ்ஸாக இருக்கிறார். அதேபோல், அஜித்தின் மகன் ஆத்விக், பிரிண்டட் ஷர்ட் போட்டு மாஸ் காட்டுகிறார்.

முன்பெல்லாம் ஊடகங்களுக்கே தலை காட்டாத அஜித், இப்போது செல்லும் இடமெல்லாம் ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக்கொள்கிறார். அஜித்தின் இந்த மாற்றம் அவரது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது. ஏர்போர்ட், பைக் டூர் செல்லும் இடங்களில் அஜித் தொடர்ந்து ரசிகர்களுடன் போட்டோ எடுத்துவருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், விரைவில் விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











