தல ரிஸ்க் எடுப்பார்னு தெரியும் ஆனால் இந்த அளவுக்கா?
சென்னை: தல 60 படத்தில் அஜித்தின் கதாபாத்திரம், லுக் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அஜித்தை சிறுத்தை சிவா மொத்த குத்தகைக்கு எடுத்து 4 படங்களை இயக்கினார். விஸ்வாசம் படத்தை அடுத்து அஜித் ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தார். அந்த படம் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாக உள்ளது.

பிங்க் இந்தி படத்தின் ரீமேக் தான் என்றாலும் நேர்கொண்ட பார்வை படத்தில் சில மாற்றங்கள் செய்துள்ளார் ஹெச். வினோத். இந்த படத்தை அடுத்தும் அஜித் வினோத் இயக்கத்தில் தான் நடிக்கிறார். நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூர் தான் தல 60 படத்தையும் தயாரிக்கிறார்.
தல 60 படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாராம். போலீஸ் என்றாலும் நரைத்த முடியுடன் தான் நடிக்கப் போகிறாராம். அந்த படத்தில் இளம் நடிகை ஒருவர் அஜித்தின் மகளாக நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. வளர்ந்த பெண்ணுக்கு தந்தையாக நடிக்க அஜித் துணிந்து ரிஸ்க் எடுக்கிறார்.
சீனியர் ஹீரோக்கள் சிலர் டை அடித்துக் கொண்டு இளம் நடிகைகளுடன் டூயட் பாடி வரும் நிலையில் அஜித் தன் வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பது அவரின் ரசிகர்களை பெருமை அடையச் செய்துள்ளது.
அஜித்தை பெப்பர் லுக்கில் பார்க்க ரசிகர்கள் ஆவலாகத் தான் உள்ளனர். இருப்பினும் அவரின் சால்ட் லுக்கும் அவர்களுக்கு பிடித்துள்ளது. அஜித் நரைத்த முடியுடன் இருப்பதை பார்த்து சில ஹீரோக்கள் டை அடிப்பதை நிறுத்திவிட்டு இயல்பாக உலாவிக் கொண்டிருக்கிறார்கள்.
நேர்கொண்ட பார்வை படம் போன்று தல 60 படம் ரீமேக் இல்லை. இந்த படத்தில் அஜித் கார் பந்தய வீரராக நடிக்கக்கூடும் என்று கூறப்பட்ட நிலையில் போலீஸ் கதை என்று தகவல் வெளியாகியுள்ளது.
அஜித் சந்தோஷமாக இளம் நடிகைக்கு அப்பாவாக நடிப்பார். ஆனால் அந்த நடிகைக்கு அம்மாவாக நடிக்க யார் ஒப்புக் கொள்ளப் போகிறார்களோ?


Click it and Unblock the Notifications











