Don't Miss!
- Technology UPI கெடு முடிந்தது.. Paytm யூசர்கள் உடனே இதை பண்ணுங்க.. NPCI கொடுத்த அப்ரூவல்.. இனி எஸ்பிஐ, எச்டிஎப்சிதான்!
- Sports உனக்காக நான் இருக்கேன் நண்பா! 34 பந்தில் அரைசதம் அடித்த சூர்யகுமார்..ஹர்திக்கிற்கு கொடுத்த ரியாக்சன்
- Automobiles இந்த காரோட உடல் ரொம்ப நீளமா இருக்கும்! டெரிடரி பேருக்கு பதிவு செய்த ஃபோர்டு.. பெரிய சம்பவம் நடக்கபோகுது!
- News சென்னை பயணிகள் கவனத்துக்கு.. நாளை மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்.. தேர்தலையொட்டி மேஜர் அறிவிப்பு
- Finance தீபக் பாரேக் திடீர் ராஜினாமா.. ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்ஷூரன்ஸ் அறிவிப்பு..!!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தல 61 ஹாட் அப்டேட்... மீண்டும் பாலிவுட் ரீமேக்கில் நடிக்கும் அஜித்.. இயக்குநர் யார் தெரியுமா?
ஆர்டிகல் 15 படத்தின் தமிழ் ரீமேக்கில் அஜித் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை: அஜித்தின் 61வது படம் ஆர்டிகல் 15 படத்தின் தமிழ் ரீமேக் என தகவல் வெளியாகியுள்ளது.
அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் நேர்கொண்ட பார்வை. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆபிசிலும் நல்ல வசூல் செய்தது.
பிங்க் இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கான நேர்கொண்ட பார்வையை இயக்கியது எச்.வினோத். இப்படத்தை தயாரித்தது போனி கபூர். மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் ஆசைக்காக அஜித் இந்த படத்தில் நடித்தார்.
போலீசாக அஜித்
நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து அஜித் நடிக்கவுள்ள படத்தையும் எச்.வினோத் தான் இயக்குகிறார். போனி கபூர் தான் தயாரிக்கிறார். இப்படம் முழுக்க முழுக்க வினோத்தின் கற்பனையில் உருவாக்கப்பட்டுள்ள கதையை அடிப்படையாக கொண்டது. கார் ரேசர் மற்றும் போலீஸ் அதிகாரியாக அஜித் இப்படத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
வைரலான போட்டோக்கள்
மேலும் இந்த படத்தில் நடிப்பதற்காக அஜித் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக ஆகியிருக்கிறார். அந்த போட்டோக்கள் சமீபத்தில் இணையத்தில் வைரலானது. தல 60 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கவுள்ளது.
தல 61 அப்டேட்
இந்நிலையில் அஜித்தின் அடுத்த படமான தல 61 குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. ஆயுஷ்மான் குரானா நடிப்பில் இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டமான ஆர்டிகல் 15 படத்தின் தமிழ் ரீமேக்கில் அஜித் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
தயாரிப்பாளர்
சமீபத்தில் இப்படத்தை பார்த்து அஜித் பாராட்டியதாகவும், அதில் நடிக்க ஒகே சொல்லியிருப்பதகாவும் தெரிகிறது. ஆர்டிகல் 15 படத்தின் காப்பிரைட் உரிமையும் போனி கபூர் வசம் தான் உள்ளது. எனவே தல 61 தயாரிப்பாளர் அவர் என பேசப்படுகிறது.
இயக்குநர் விஷ்ணுவர்த்தன்
இதற்கிடையே தல 61 குறித்து மற்றொரு செய்தியும் வெளியாகியுள்ளது. அஜித்தின் குட்புக்கில் இடம் பிடித்துள்ள இயக்குனர்களில் ஒருவரான விஷ்ணுவர்தன் தான் தல 61 படத்தின் இயக்குனர் எனக் கூறப்படுகிறது. சமீபத்தில் அஜித்தை சந்தித்து விஷ்ணு கதை சொன்னதாகவும், அந்த கதை அவருக்கு மிகவும் பிடித்து போய்விட்டதாகவும் தெரிகிறது.
அஜித் ஸ்டைல்
எனவே அந்த கதைக்கு திரைக்கதை அமைக்கும் பணியில் இயக்குனர் விஷ்ணுவர்தன் பிஸியாக இருக்கிறார் என்ற பேச்சும் உள்ளது. அஜித்தை பொறுத்தவரை ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்க மாட்டார். ஆதலால் வினோத் இயக்கும் படத்தில் நடித்து முடித்த பிறகு தான் அடுத்த படம் குறித்து அஜித் முடிவெடுப்பார் என்பதே நிதர்சனம்.