மனோபாலாவுக்கு இரங்கல் தெரிவிக்கக் கூட மனசு வரலையா.. அஜித் முதல் தனுஷ் வரை இத்தனை பேர் அமைதி ஏன்?
சென்னை: இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட மனோபாலா உயிரிழந்த நிலையில், திரையுலகத்தினர் பலரும் திரண்டு வந்தும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சமூகவலைதளத்தில் ஒரு ட்வீட் போட்டுக் கூட இரங்கல் தெரிவிக்காமல் பல முன்னணி நடிகர்கள் அமைதி காத்து வரும் நிலையில், ரசிகர்களே அந்த நடிகர்களை சோஷியல் மீடியாவில் விளாசி வருகின்றனர்.
நடிகர்கள் அஜித், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரும் மனோபாலாவுக்கு இரங்கல் தெரிவிக்கவில்லை என்கின்றனர்.

நேரில் வரமுடியவில்லை என்றாலும்: ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் தமிழ்நாட்டில் இல்லாத நிலையில், மனோபாலாவின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத சூழலிலும் நேற்றே உடனடியாக மனோபாலா மறைவு செய்தி அறிந்ததுமே அவருக்கு இரங்கல் தெரிவித்து இருந்தனர்.
நடிகர் விஜய், ஆர்யா, விஜய்சேதுபதி, சமுத்திரகனி, சித்தார்த் உள்ளிட்ட பலரும் நேரிலேயே வந்து அஞ்சலி செலுத்திச் சென்றனர். இந்நிலையில், மனோபாலாவுடன் மிகவும் நெருக்கமாக பல படங்களில் நடித்த சில முன்னணி நடிகர்கள் ஒரு ட்வீட் கூட போடாமல் அமைதி காத்து வருவது ஏன் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
அஜித் வழக்கம் போல வரல: நடிகர் அஜித்தின் தந்தை மறைந்த செய்தி கேட்டு விஜய் உள்ளிட்ட தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் அவரது இல்லத்துக்கு சென்று ஆறுதல் தெரிவித்தனர்.

ஆனால், மற்ற எந்தவொரு சினிமா பிரபலங்கள் மறைந்தாலும் நடிகர் அஜித் கலந்து கொள்வதே இல்லை என்கிற விமர்சனம் தொடர்ந்து வைக்கப்பட்டு வரும் நிலையில், மனோபாலாவின் மறைவுக்கும் அவர் வரவில்லை. ஆனால், அஜித் சார்பாக அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா நேரில் வந்து அஞ்சலி செலுத்தி இருந்தார். அஜித்தின் மனைவி ஷாலினியாவது வந்து அஞ்சலி செலுத்தி இருக்கலாமே என விஜய் ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
சூர்யாவுக்கு என்ன ஆச்சு?: நடிகர் சிவகுமார் நேற்றே நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நிலையில், நடிகர் கார்த்தி ட்விட்டர் பக்கத்தில் மனோபாலாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தார். ஆனால், நடிகர் சூர்யா இதுவரை ஒரு ட்வீட் கூட போடவில்லை என்றும் ஷூட்டிங்கில் இன்னுமா பிசியாக இருக்கிறார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
தனுஷ் இப்படி செய்யலாமா?: யாரடி நீ மோகினி உள்ளிட்ட பல படங்களில் மனோபாலாவுடன் இணைந்து நடித்த நடிகர் தனுஷும் மனோபாலா மறைவுக்கு ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லையே ஏன் என ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.
கேப்டன் மில்லர் ஷூட்டிங்கில் பிசியாக இருந்தாலும், நேத்து நைட் கூட மனோபாலா பற்றி அவருக்கு தெரிந்திருக்காதா? ஒரு இரங்கல் கூட தெரிவிக்க முடியாதா என கமெண்ட்டுகள் பறக்கின்றன.

சிவகார்த்திகேயனும் சைலன்ட்: ட்விட்டரில் இருந்து விலகுவதாக அறிவித்த நடிகர் சிவகார்த்திகேயன் நேரிலாவது சென்று இரங்கல் தெரிவித்து இருக்கலாமே. அவர் வீடும் அங்கே தானே உள்ளது.
ஷூட்டிங்கில் பிசியாக இருந்தாலும், அட்மினிடம் சொல்லி ஒரு இரங்கல் செய்தியாவது போட்டு இருக்கலாமே, ரஜினி முருகன், மிஸ்டர் லோக்கல், சீமராஜா என பல படங்களில் நடித்திருந்த நடிகருக்கு ஒரு அஞ்சலி கூட செலுத்தவில்லையே ஏன் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
மேலும், மனோபாலாவுடன் இணைந்து நடித்த முன்னணி நடிகைகளான நயன்தாரா, த்ரிஷா உள்ளிட்ட பலரும் கூட இரங்கல் தெரிவிக்கவில்லை என குற்றச்சாட்டுக்களை ரசிகர்கள் அடுக்கி உள்ளனர். நடிகை லைலா உள்ளிட்ட பிரபலங்கள் சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











