twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரு தல இல்லையாம்.. இரண்டு தலயாம்!

    |

    Recommended Video

    ஒரு தல இல்லையாம்.. இரண்டு தலயாம்

    சென்னை: வலிமை படத்தில் அஜீத் இரண்டு கெட்டப்பில் வருகிறாராம். அதுதான் இப்போது லேட்டஸ்ட் செய்தி.

    அஜீத் ரசிகர்கள் அடுத்து ஆவலுடன் எதிர்பார்த்துள்ள படம் வலிமை. தல இதில் எப்படி அதகளம் செய்யப் போகிறார் என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    ajith to don two getups in valimai


    இந்த நிலையில் படத்தில் அஜீத் 2 கெட்டப்பில் வருவதாக பேச்சு அடிபடுகிறது. அதற்கேற்ப ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் ஷார்ட் கட்டோடு, இறக்கிய மீசையுடன் ஒரு அஜீத், இன்னொரு கெட்டப்பில் ஒரு அஜீத்துமாக உள்ளனர். எனவே தல இப்படத்தில் 2 கெட்டப்போடு நடிப்பது உறுதியாகியுள்ளது.

    ஒரு தல வந்தாலே தியேட்டர்கள் தூள் பறக்கும்.. இதில் இரட்டைத் தலையோடு வருகிறார் அஜீத். பட்டையைக் கிளப்பும் என நம்பலாம்.

    ajith to don two getups in valimai


    ரஜினிக்கே போட்டியாக ஒரு படமா.. ஆச்சரியமா இருக்குல்ல.. ஆனா வரப் போகுதாம் பாஸ். பட்டாஸ் படம் ஜனவரி 26ம் தேதி வெளி வரும் என சொல்லப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த தேதியில் முத்துச் செல்லப்பன் இயக்கியுள்ள பொன் மாணிக்கவேல் படமும் ரிலீஸாகும் என கூறப்பட்டுள்ளது. இருப்பினும் சற்று முன்னதாக ஜனவரி 15ம் தேதியே இந்தப் படம் வெளியாகலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது.

    அதாவது சூப்பர் ஸ்டார் படத்துடன் பொன் மாணிக்கவேலும் இணைந்து வெளியாகலாம் என்று சொல்கிறார்கள். அப்படி நடக்குமா நடந்தால் பட்டையைக் கிளப்புமா என்பது பெரும் எதிர்பார்ப்பாகும்.

    அடுத்து ஜூனியர் என்டிஆர் நடிக்க ராஜமவுலி இயக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக ஹாலிவுட் நடிகை நடிக்கிறார். கூடவே மேலும் 2 ஹாலிவுட் நடிகர்களும் களம் காண்கின்றனராம். படத்தை பிரமாண்டமாக எடுக்கவுள்ளார் ராஜமவுலி. படம் பாகுபலியை மிஞ்சுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    English summary
    Ajith is donning two getups in Valimai movie it is said.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X