ஐதராபாத்தில் 'வலிமை' ஷூட்டிங்.. 25 ஆம் தேதி முதல் பங்கேற்கிறார் அஜித்.. படக்குழு தீவிரம்!

By

சென்னை: வலிமை படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் இன்று மீண்டும் தொடங்கி உள்ளது.

நடிகர் அஜித், இப்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். ஹெச். வினோத் இயக்குகிறார்.

இந்தப் படத்தின் ஷூட்டிங் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டு இருந்தது. லாக்டவுனில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கியுள்ளனர்.

மீண்டும் தொடங்கியது

மீண்டும் தொடங்கியது

வலிமை பட ஷூட்டிங்கும் சென்னையில் சில நாட்களுக்கு முன் மீண்டும் தொடங்கியது. அதில், வில்லன் நடிகர் கார்த்திகேயா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. அஜித் பங்கேற்காத காட்சிகளை அங்கு படமாக்கினர். இந்நிலையில், இந்தப் படத்தின் ஷூட்டிங் ஐதராபாத், ராமோஜிராஜ் பிலிம்சிட்டியில் இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.

நடிகர் அஜித்குமார்

நடிகர் அஜித்குமார்

இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இங்குதான் நடந்தது. பிறகு சென்னையில் நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வலிமை ஷூட்டிங்கில் நடிகர் அஜித்குமார் வரும் 25 ஆம் தேதி கலந்து கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது. கொரோனாவுக்கு பிறகு அவர் முதன்முறையாக படப்பிடிப்பில் பங்கேற்கிறார்.

போனி கபூர்

போனி கபூர்

படத்தின் ஹீரோயின் ஹூமா குரேஸி, கார்த்திகேயா ஆகியோரும் இந்த ஷெட்யூலில் பங்கேற்கிறார்கள். கொரோனா பரவல் இருப்பதால், படக்குழுவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட இருக்கிறது. தகுந்த முன்னெச்சரிக்கையுடன் படப்பிடிப்பு நடக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

ரேஸ் காட்சி

ரேஸ் காட்சி

இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். படத்தில் ரேஸ் காட்சி ஒன்று இடம்பெறுகிறது. அதை டெல்லியில் படமாக்க அனுமதி கிடைக்காததால், ஐதராபாத்தில் படமாக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X