அஜித்துக்கு பாலிவுட் ஹீரோயினாமே...13-ல் தொடங்குது வலிமை ஷூட்டிங்!.
சென்னை: அஜித்குமார் நடிக்கும் வலிமை படத்தின் ஷூட்டிங், வரும் வெள்ளிக்கிழமை ஐதராபாத்தில் தொடங்குகிறது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த படம், நேர்கொண்ட பார்வை. இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான பிங்க் படத்தின் ரீமேக் இது. இந்தியில் அமிதாப்பச்சன் நடித்திருந்த வேடத்தில் அஜித் நடித்திருந்தார். இந்தப் படம் ஹிட்டானது.

வலிமை
இதைத் தொடர்ந்து வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடிக்கிறார் அஜித். நேர்கொண்ட பார்வையை இயக்கிய வினோத், இதையும் இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

13-ல் ஷூட்டிங்
இந்தப் படத்தில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இதன் ஷூட்டிங் வரும் 13 ஆம் தேதி ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்குகிறது. இதைப் படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.

சென்டிமென்ட்
கடந்த வருடம் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை இரண்டு படங்களுமே ஹிட். இதன் ஷூட்டிங் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில்தான் நடந்தது. அந்த சென்டிமென்ட் காரணமாக இந்தப் படத்தின் ஷூட்டிங்கும் அங்கு நடப்பதாகக் கூறப்படுகிறது.

பாலிவுட் ஹீரோயின்
இந்நிலையில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் ஹீரோயின்கள் சிலரிடம் பேசி வருகின்றனர். தமிழில் நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்த வித்யா பாலனை நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க வைத்தனர். இதே போல அங்குள்ள முன்னணி நடிகை ஒருவர் அஜித் நடிகையாக நடிப்பார் என்கிறார்கள்.

ஹீரோயின் இல்லாத காட்சி
இதற்கிடையே 13 ஆம் தேதி தொடங்கும் முதல் ஷெட்யூலில் ஹீரோயின் இல்லாத காட்சிகளை மட்டுமே படமாக்க உள்ளனர். ஆக்ஷன் மற்றும் சேஸிங் காட்சிகள் படமாக்கப்படும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications











