மீண்டும் காக்கிக்கு மாறும் அஜித்: ஒர்க்அவுட் ஆரம்பிச்சாச்சு பாஸ்
சென்னை: நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து தான் இயக்கும் புது படத்திற்காக ஹெச். வினோத் அஜித்தை வியர்வை சிந்த வைக்கிறாராம்.
இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற பிங்க் படத்தை ஹெச். வினோத் அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோரை வைத்து நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்துள்ளார்.

படத்தை ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தை அடுத்து அஜித் மீண்டும் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிக்கிறார். அது ரீமேக் இல்லை. மாறாக அஜித்துக்காகவே வினோத் மாஸ் கதை எழுதி வைத்துள்ளாராம். அதை தான் படமாக்க உள்ளாராம்.
அந்த படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஃபிட்டான போலீஸாக மாற அஜித் ஜிம்மில் மாங்கு மாங்குன்னு ஒர்க்அவுட் செய்து கொண்டிருக்கிறாராம். முன்னதாக விவேகம் படத்திற்காக அஜித் செமயமாக ஒர்க்அவுட் செய்து மரண மாஸ் கெட்டப்பில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து அஜித் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிக்கும் படத்தையும் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தான் தயாரிக்கிறார். மேலும் அஜித்தை பாலிவுட்டுக்கு அழைத்துச் செல்லவும் போனி கபூர் ஆசைப்படுகிறார். அஜித் மட்டும் சரி என்று ஒரு வார்த்தை சொன்னால் அவரை வைத்து இந்தியில் படத்தை தயாரிக்க போனி கபூர் தயாராக உள்ளார்.
பாலிவுட்டில் கான்களுக்கு நிகராக பெயர் எடுத்த வித்யா பாலன் தமிழ் படத்தில் முதன்முதலாக நடித்துள்ளார். முன்னதாக அவர் மனசெல்லாம் படத்தில் ஸ்ரீகாந்த் ஜோடியாக நடித்தார். படப்பிடிப்பு துவங்கிய சில நாட்களில் வித்யா பாலனுக்கு நடிக்கத் தெரியவில்லை என்று கூறி அவரை நீக்கிவிட்டு த்ரிஷாவை ஒப்பந்தம் செய்தார்கள்.
நடிக்கத் தெரியவில்லை என்று கோலிவுட்டில் நிராகரிக்கப்பட்ட வித்யா பாலன் தனது நடிப்புத் திறமையை பாலிவுட்டில் நிரூபத்த பிறகு இங்கு வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பிங்க் படத்தை போன்று இல்லாமல் தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் கதையில் சில மாற்றங்களை செய்துள்ளாராம் வினோத். பிங்க் படத்தில் அமிதாப் பச்சனின் மனைவிக்கு பெரிதாக வேலை இல்லை. ஆனால் தமிழில் அஜித்தின் மனைவியாக நடித்துள்ள வித்யாவுக்கு முக்கியத்துவம் உள்ளதாம்.


Click it and Unblock the Notifications











