சென்னை சிட்டியில் ஆட்டோவில் வலம் வரும் அஜித்.. தீயாய் பரவும் வீடியோ.. கொண்டாடும் ரசிகர்கள்!

சென்னை: நடிகர் அஜித் ஆட்டோவில் வலம் வரும் வீடியோ இணையத்தை திணறடித்து வருகிறது.

Recommended Video

Thala Ajith in AUTO | Chennaiயில் Autoவில் வலம்வரும் Thala | Valimai

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக உள்ளார். கோடிக்கணக்கான ரசிகர்களையும் கொண்டுள்ளார்.

எந்த பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க கூடாது, ஊடகங்களுக்கு பேட்டியளிக்க கூடாது, மீடியா கண்களில் படக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளார் அஜித்.

கமிஷனர் அலுவலகத்தில்..

கமிஷனர் அலுவலகத்தில்..

ஆனாலும் அவ்வப்போது ஏதாவது ஒரு விஷயத்தில் ரசிகர்களின் கண்ணில் பட்டு விடுகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூகுள் மேப் செய்த தவறால் துப்பாக்கி சூடு பயிற்சி எடுக்கும் நிகழ்விடமான ரைஃபிள் கிளப்புக்கு செல்வதற்கு பதில் சென்னை வேப்பேரியில் உள்ள கமிஷனர் அலுவலகத்துக்கு சென்றார் அஜித்.

அஜித்தின் மற்றொரு வீடியோ

அஜித்தின் மற்றொரு வீடியோ

அப்போது அங்கு அவரை அடையாளம் கண்டுக்கொண்ட ரசிகர்கள் அவருடன் போட்டோ எடுத்துக் கொண்டனர். அஜித் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்ற வீடியோக்களும் வைரலானது. இந்நிலையில் நடிகர் அஜித்தின் மற்றொரு வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

மேன் ஆஃப் சிம்பிளிசிட்டி

மேன் ஆஃப் சிம்பிளிசிட்டி

அதாவது அஜித் சென்னை சிட்டியில் ஆட்டோவில் வலம் வருகிறார். கறுப்பு பேண்ட் கறுப்பு டிஷர்ட் அணிந்துள்ள அஜித், மாஸ்க் அணிந்தப்படி ஆட்டோவில் வலம் வருகிறார். இதனையும் அடையாளம் கண்ட அஜித் ரசிகர்கள், அஜித் ஆட்டோவில் பயணம் செய்யும் காட்சியை படம் பிடித்து மேன் ஆஃப் சிம்பிளிசிட்டி என வைரலாக்கி வருகின்றனர்.

ஆட்டோவில் பயணம்

அஜித் சைக்கிளில் செல்லும் வீடியோக்கள் பைக் ஓட்டும் வீடியோக்கள் பல முறை வெளியாகியுள்ள நிலையில் தற்போது அவர் ஆட்டோவில் செல்லும் காட்சியும் வைரலாகி வருகிறது. நடிகர் அஜித் தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

வேட்பாளர்கள் பிரசாரம்

வேட்பாளர்கள் பிரசாரம்


இந்தப் படத்தின் அப்டேட்டை கேட்டு கேட்டு அஜித்தின் ரசிகர்கள் அலுத்துப்போய் விட்டனர். தமிழக சட்டசபை தேர்தல் வேட்பாளர்களே தாங்கள் வெற்றி பெற்றால் வலிமை அப்டேட் வாங்கி தரப்படும் என பிரசாரம் செய்து வரும் நிலை ஆகிவிட்டது.

மே ஒன்றாம் தேதி

மே ஒன்றாம் தேதி

இந்நிலையில் வரும் மே ஒன்றாம் தேதியான அஜித்தின் பிறந்த நாளில் வலிமை அப்டேட் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் அண்மையில் தெரிவித்திருந்தார். இதனிடையே வலிமை படத்தின் அடுத்த ஷெட்யூட் ஷுட்டிங் வரும் ஏப்ரலில் தொடங்கும் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X