மங்காத்தா போல் விடாமுயற்சியிலும் ஒர்க் அவுட் ஆகுமா அஜித், திரிஷா, அர்ஜுன் சென்ட்டிமென்ட்?
சென்னை: அஜித் நடிப்பில் நாளை விடாமுயற்சி திரைப்படம் வெளியாகவிருக்கிறது. மகிழ் திருமேனி இயக்கியிருக்கும் இப்படத்துக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. இருந்தாலும் பெரிய எதிர்பார்ப்போடு படத்துக்கு வந்துவிடாதீர்கள் என்று மகிழ் திருமேனி முன்கூட்டியே தெரிவித்துவிட்டார். ப்ரீ புக்கிங்கில் பட்டையை கிளப்பும் விடாமுயற்சிக்கு தமிழ்நாடு அரசு நாளை காலை 9 மணி சிறப்பு காட்சிக்கும் அனுமதியளித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
அஜித்தின் நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் துணிவு. ஹெச்.வினோத் இயக்கத்தில் வங்கி கொள்ளையையும், வங்கி அடிக்கும் கொள்ளையையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த அந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்தப் படத்துக்கு பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்க கமிட்டானார் அஜித்குமார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் பல தடங்கல்களை சந்தித்தாலும் தொடர்ந்து விடாமல் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவழியாக முடிந்த ஷூட்டிங்: விடாமுயற்சி ஷூட்டிங்கில் தடங்கல்கள் ஏற்பட்டு தாமதமானதால் படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் நல்வாய்ப்பாக அப்படியெல்லாம் எதுவும் நடக்காமல் ஷூட்டிங் முடிந்தது. முதலில் வெளியான போஸ்டர்கள் ட்ரோலை சந்தித்தன. அதனையடுத்து வெளியான டீசர் கலவையான விமர்சனத்தை பெற்றது. டீசரை பார்த்த பிறகு இது பிரேக் டவுன் படத்தின் தழுவல்தான் என்பதை திரை ஆர்வலர்களும், ரசிகர்களும் ஊர்ஜிதப்படுத்திக்கொண்டார்கள்.
நாளை ரிலீஸ்: போஸ்டர்கள், டீசருக்கு பிறகு ட்ரெய்லரும், இரண்டு சிங்கிள்களும் வெளியாகி பட்டையை கிளப்பின. அதனைப் பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக படம் ஹிட்டடிக்கும் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார்கள். முதலில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 10ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் பிப்ரவரி ஆறாம் தேதிக்கு ரிலீஸாகும் என்று தள்ளிவைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. அதன்படி படம் நாளை ரிலீஸாகிறது.
சிறப்பு காட்சி: முதலில் இந்தப் படத்துக்கு அதிகாலை சிறப்பு காட்சிக்கான அனுமதி கிடைக்குமா என்ற கேள்வி இருந்தது. ஆனால் அதற்கு வாய்ப்பில்லாததால் காலை 9 மணி சிறப்பு காட்சிக்காவது தமிழ்நாடு அரசு அனுமதி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு இருந்த சூழலில்; அதற்கு அனுமதியளித்துவிட்டது அரசு. இதனால் நாளை காலை 9 மணியை எதிர்பார்த்திருக்கிறார்கள் ரசிகர்கள். படத்தின் ப்ரீ புக்கிங் வசூலும் நல்ல விதமாக நடந்துவருகிறது. இந்தச் சூழலில் அஜித்தின் ரசிகர்களிடம் இன்னொரு ஆவல் எழுந்திருக்கிறது.
என்ன ஆவல்?: அதாவது இந்தப் படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து ஏற்கனவே நடித்த மங்காத்தா திரைப்படம் மிகப்பெரிய ப்ளாக் பஸ்டராக அமைந்தது. முக்கியமாக அதிலும் அஜித்தும், அர்ஜுனும் படம் முழுக்க எதிராளிகளாக வருவார்கள். கடைசியில் நண்பர்கள் என்கிற ட்விஸ்ட் வைக்கப்படும். ஆனால் இதில் முழுக்க முழுக்க எதிரிகளாகவே வருவார்கள் என்பது போஸ்டரை பார்க்கும்போதே தெரிகிறது. எனவே இவர்கள் மூன்று பேரும் இணைந்து நடித்து மங்காத்தா எப்படி மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதோ; அந்த சென்ட்டிமென்ட்படி விடாமுயற்சி படமும் ஹிட்டடிக்குமா என்கிற கேள்வியை ஆவலோடு எழுப்பி வருகிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











