சுப்ரமணியம் அஜித் குமார் ஆகிய நான்.. முதலமைச்சராகவே மாத்தி அலப்பறை பண்ணும் ரசிகர்கள்!

சென்னை: நடிகர் அஜித் தனது ரசிகர் ஒருவருக்காக கைப்பட எழுதிய பிறந்தநாள் கடிதம் டிரெண்டான நிலையில், அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அஜித் ரசிகர்கள் செய்து வரும் அலப்பறைக்கு அளவே இல்லை.

வலிமை படத்தைப் போலவே ஏகே61 படம் தொடர்பான ஃபர்ஸ்ட் லுக் உள்ளிட்ட எந்தவொரு அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை.

தீபாவளிக்கு அஜித்தின் ஏகே61 படம் வராது என கிளம்பி உள்ள தகவல்களை மறுத்தும் படக்குழு இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாத நிலையில், ஏகே61 படத்தின் ரிலீஸ் தாமதம் ஆகும் என்பது உறுதியாகி உள்ளது.

தொடர்ந்து டிரெண்டிங்கில்

தொடர்ந்து டிரெண்டிங்கில்

நடிகர் விஜய்யின் பிறந்தநாளுக்கு முன்னதாக வெளியாக தொடங்கிய அஜித்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், விஜய் பிறந்தநாள் முடிந்து ஜூன் மாதமே முடிய உள்ள நிலையிலும் தொடர்ந்து டிரெண்டாகி வருகின்றன. ஐரோப்பா, இங்கிலாந்து என உலக டூர் அடித்து வரும் நடிகர் அஜித், பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடும் வீடியோ, நடந்து செல்லும் வீடியோக்கள் வலம் வருகின்றன.

பப்ளிசிட்டி பிடிக்காது

பப்ளிசிட்டி பிடிக்காது

நடிகர் அஜித்துக்கு இதுபோன்ற பப்ளிசிட்டியே பிடிக்காது, தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சர்வ சாதாரணமாக வெளியிட அவர் அனுமதிக்கவே மாட்டார் என்கிற நீண்ட கால கட்டுப்பாடுகள் எல்லாம் தற்பொது சுக்குநூறாக உடைந்து ஏகப்பட்ட போட்டோக்களும், வீடியோக்களும் வெளியாகி வருவதை பார்த்து ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்ட சிலர் அவரை நேரடியாக வம்பிழுத்து ட்ரோல் செய்து வருகின்றனர்.

ரசிகருக்கு வாழ்த்து

ரசிகருக்கு வாழ்த்து

ரசிகர்களுடன் அஜித் தொடர்ந்து எடுத்து வரும் புகைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில், ரசிகர் ஒருவருக்கு நடிகர் அஜித் கைப்பட எழுதிய வாழ்த்து கடிதம் வீடியோவாக வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. எங்களுக்கு ஒரு கடிதம் கிடைக்குமா என ரசிகர்கள் ஒவ்வொருவரும் ஏங்கி கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர்.

முதலமைச்சர் அஜித்

முதலமைச்சர் அஜித்

அரசியல் வாடையே வேண்டாம் என ஒதுங்கி தனது படங்களில் கூட அதன் சாயல் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதை பார்த்துக் கொள்ளும் நடிகர் அஜித்தை தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சராகவே மாற்றி 'சுப்பிரமணியம் அஜித் எனும் நான்' என நடிகர் அஜித் முதல்வர் சீட்டில் அமர்ந்து கையெழுத்து போடுவது போன்ற எடிட்டை அவரது ரசிகர்கள் உருவாக்கி சமூக வலைதளத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர். நடிகர் விஜய்யின் ரசிகர்கள் தான் இதுபோன்ற போஸ்டர்கள் அடித்து வருகின்றனர் என பார்த்தால், போட்டிக்கு அஜித் ரசிகர்களும் ஆரம்பித்து விட்டனர்.

அறிக்கை விடப் போறாரு

அறிக்கை விடப் போறாரு

அஜித் ரசிகர் ஒருவர் ஷேர் செய்த அந்த புகைப்படத்தை பார்த்துப் பதறிப்போன அஜித் ரசிகர்கள், சுரேஷ் சந்திரா மூலமாக நடிகர் அஜித் குமார் அறிக்கை விடப் போறாரு, முதலில் டெலிட் பண்ணிடுங்க என அட்வைஸ் செய்து வருகின்றனர். நிஜத்தில் இல்லை என்றாலும், ஏதாவது ஒரு படத்தில் இப்படியொரு சீனில் அஜித் நடித்தால் தல டக்கர்டோய் என கத்தலாமே என்றும் அஜித் ரசிகர்கள் கமெண்ட்டில் தங்களது ஆசைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X