ஹரிக்காக 'அடங்காதவன்' ஆகும் அஜீத்?

By Siva

சென்னை: ஹரி அஜீத்தை வைத்து படம் எடுக்கப் போவதாகவும், அதற்கு அடங்காதவன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

அஜீத்தின் 53வது படமான ஆரம்பம் விரைவில் ரிலீஸாகட்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் அஜீத் சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்காக அவர் வழக்கம் போல் டூப் போடாமல் சண்டை காட்சிகளில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ரயில் சாகசம்

ரயில் சாகசம்

வீரம் படத்திற்காக அஜீத் ரயில் மீது சாகசம் செய்யும் காட்சியை படமாக்கியுள்ளனர்.

அடுத்து அடங்காதவன்

அடுத்து அடங்காதவன்

வீரம் படத்தை அடுத்து அஜீத் ஹரி இயக்கத்தில் நடிக்கிறாராம். படத்திற்கு அடங்காதவன் என்று பெயர் வைத்துள்ளார்கள் என்று ஒரு செய்தி உலா வருகிறது.

அதென்ன அடங்காதவன்?

அதென்ன அடங்காதவன்?

யாருக்கும் அடங்காதவன் என்ற பொருளில் அடங்காதவன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாம். படத் தலைப்பு அஜீத்தின் வாழ்க்கையை குறிக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

தயாரிப்பு

தயாரிப்பு

அடங்காதவனை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கிறாராம், தேவி ஸ்ரீபிரசாத் இசையமைப்பதாகவும் அது கூறுகிறது.

ரசிகர்கள் ஆசை

ரசிகர்கள் ஆசை

இது தொடர்பாக பர்ஸ்ட் லுக் என்று ஒரு போட்டோவும் வெளியாகியுள்ளது. ஆனால் அது அதிகாரப்பூர்வமானதல்ல. மாறாக, இது அஜீத் ரசிகர்களால் உருவாக்கப்பட்டது. ரசிகர்களின் விருப்பத்தை ஏற்பார்களா அஜீத்தும், ஹரியும்.. இரண்டு பேரும் சேர்ந்து பணியாற்றுவார்களா... வழக்கம் போல காலமே பதில் சொல்லட்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X