அஜித்தின் வலிமை படம் பிளாப்...சூசகமாக பதிவிட்ட ப்ளூ சட்டை மாறன்.

சென்னை : தமிழில் படங்களை விமர்சனம் செய்பவர்களில் ப்ளூ சட்டை மாறன் ஒருவர். தனது கிண்டலான பேச்சால் ரசிகர்களை கவர்ந்தவர். திரைப்படங்களை கலாய்த்து விமர்சித்தே பெயர் வாங்கியவர்.

படங்களின் விமர்சனத்தை தொடர்ந்து ஒரு திரைப்படமும் இயக்கினார் ப்ளூ சட்டை மாறன். அவர் இயக்கிய ஆன்ட்டி இந்தியன் படம் பெரிய அளவில் எடு படாததால் மறுபடியும் படங்களை விமர்சனம் செய்வதை தொடர்ந்து வருகிறார்.

இந்நிலையில் RRR படத்தின் வெற்றியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர் தமிழ் படங்களை கிண்டல் செய்துள்ளார். பெயர் குறிப்பிடாமல் அஜித்தின் வலிமை படத்தை கேலி செய்துள்ளார்.

விமர்சனமும் இயக்கமும்

விமர்சனமும் இயக்கமும்

ப்ளூ சட்டை மாறன் பல பெரிய இயக்குனர்களின் படங்களை கலாய்த்து விமர்சனம் செய்தவர். ஒரு குறிப்பிட்ட சிறிய மக்கள் கூட்டம் அவரது விமர்சனத்தை கேட்டு படம் நன்றாக இருக்கு என்றால் திரையரங்குகளுக்கு செல்வது, படம் நன்றாக இல்லை என்றால் திரையரங்குகளுக்கு போகாமல் இருப்பதும் செய்கின்றனர். இந்நிலையில் பல பேர் விமர்சனம் செய்வது சுலபம் ஒரு படம் எடுத்து பார் என சொல்ல அவர்களுக்காகவே ஆன்ட்டி இந்தியன் படத்தை இயக்கி வெளியிட்டார் மாறன். படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் வேறுவழியின்றி அதே விமர்சனம் செய்யும் தொழிலை தொடர்ந்து வருகிறார்.

 வலிமை விமர்சனம்

வலிமை விமர்சனம்

அஜித் நடித்து H. வினோத் இயக்கிய வலிமை திரைப்படம் பிப்ரவரி 24 ஆம் தேதி அன்று ரிலீஸாகி பெருவாரியான மக்களின் ஆதரவை பெற்றது. தமிழகத்தில் முதல் நாள் வசூலில் சாதனை படைத்தது. பெரும்பாலான விமர்சனங்கள் மிகவும் பாசிட்டிவாக இருக்க ப்ளூ சட்டை மாறன் அந்த படத்தை மிகவும் மோசமாக விமர்சனம் செய்தார். படத்தை விமர்சனம் செய்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் அஜித்தை உருவ கேலி செய்தார். இதனால் அஜித் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார்.

ப்ளூ சட்டை மாறன் தாக்கப்பட்டார்

ப்ளூ சட்டை மாறன் தாக்கப்பட்டார்

வலிமை பட விமர்சனத்தால் அஜித் ரசிகர்களுக்கும் ப்ளூ சட்டை மாறனுக்கும் தொடர்ந்து விவாதம் போய்க்கொண்டிருந்தது. மாறனுக்கு போன் செய்து அஜித் ரசிகர்கள் வாக்குவாதம் செய்வதும், சில ரசிகர்கள் கோபத்தில் சில கெட்ட வார்த்தைகள் பேசுவது அதற்கு அவரும் கெட்ட வார்த்தையில் பதில் சொல்வது என தொடர, சில நாட்களுக்கு முன்பு ப்ளூ சட்டை மாறன் தாக்கப்பட்டார் எனும் செய்தி பரவலாக பேசப்பட்டது. ப்ளூ சட்டை மாறன் அதை மறுக்க சிலர் அவரே விளம்பரத்திற்காக இதையெல்லாம் செய்கிறார் எனவும் சொல்வதைக் கேட்க முடிகிறது.

3 ஹிட் படங்கள்

3 ஹிட் படங்கள்

இதற்கிடையே ப்ளூ சட்டை மாறன் RRR படத்தின் வெற்றியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் தெலுங்கு திரையுலகம் இந்த ஆண்டு அவர்களது மூன்றாவது வெற்றி படத்தை கொடுத்திருக்கிறார்கள் பீம்லா நாயக் மற்றும் Dj Tillu உடன் சேர்ந்தது . ஆனால் கோலிவுட் இன்னும் ஒரு வெற்றிப் படத்தைக் கூட தரவில்லை என சூசகமாக சொல்லியுள்ளார். வலிமை படம் 200 கோடி வசூல் என அந்தப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் சமீபத்தில் அறிவித்தும் ப்ளூ சட்டை மாறன் சுய காழ்ப்புணர்ச்சியின் காரணமாக வலிமை படத்தை வெற்றிப்படம் என ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் எனும் வாதமும் ஓடிக்கொண்டிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X