Ajith: துலாம்-துணிவு... விருச்சகம்-விடாமுயற்சி... டைட்டிலாம் டெய்லி காலண்டர்ல இருந்து எடுப்பீங்களா?

சென்னை: கோலிவுட்டின் டாப் ஹீரோவான அஜித் இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இதனையடுத்து அஜித் ரசிகர்கள் டிவிட்டர் உட்பட சமூக வலைத்தளங்களில் ஏகே 52 என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அவரது ஏகே 62 பட டைட்டிலும் நள்ளிரவில் வெளியானது.

மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி என்ற இந்த டைட்டிலை நெட்டிசன்கள் தொடர்ந்து ட்ரோல் செய்து வருகின்றனர்.

 Ajith Vidaa Muyarchi: Netizens have been trolling the title of Ajiths VidaaMuyarchi movie

விருச்சகம் - விடாமுயற்சி
கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான அஜித், இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து திரை பிரபலங்கள், ரசிகர்கள் உட்பட பலரும் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறி வருகின்றனர். மேலும், ஏகே 52 என்ற ஹேஷ்டேக்கை அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதனால், டிவிட்டர் முழுக்க அஜித் என்ற பெயர் தான் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், அஜித் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக அவரது ஏகே 62 டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது. லைகா தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்குவது உறுதியாகியுள்ளது. மேலும், விடாமுயற்சி என்ற டைட்டிலையும் படக்குழு அறிவித்துள்ளது. நள்ளிரவு வெளியான இந்த அப்டேட்டை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அதேநேரம் விடாமுயற்சி என்ற டைட்டில் அஜித் போன்ற மாஸ் ஹீரோக்களின் படங்களுக்கு செட்டாகாது என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். ஏற்கனவே அவரது ஆரம்பம், விவேகம், விஸ்வாசம், வலிமை, துணிவு படங்களின் டைட்டில்கள் ட்ரோல் செய்யப்பட்டன. ஆனாலும் அதனை கண்டுகொள்ளாமல் மீண்டும் விடாமுயற்சி என மொக்கையாக டைட்டில் வைத்துள்ளதாக நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

 Ajith Vidaa Muyarchi: Netizens have been trolling the title of Ajiths VidaaMuyarchi movie

மேலும், விடாமுயற்சி என்ற டைட்டில் ராசிபலன் சொல்வது மாதிரி இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். துலாம் ராசிகாரர்களுக்கு துணிவு, விருச்சகம் ராசிக்காரர்கள் விடாமுயற்சி பண்ணணும் என ராசிபலன் சொல்வதைப் போல இந்த டைட்டில் உள்ளது என கலாய்த்து வரும் அவர்கள், இந்த மாதிரி டைட்டிலான் டெய்லி காலண்டர்ல இருந்து எடுப்பீங்களா சார் என கேட்டுள்ளார்.

 Ajith Vidaa Muyarchi: Netizens have been trolling the title of Ajiths VidaaMuyarchi movie

மங்காத்தா, வேதாளம் மாதிரி பவர்ஃபுல் டைட்டிலை எதிர்பார்த்திருந்த அஜித் ரசிகர்கள் விடாமுயற்சி என அப்டேட் வந்ததும் ரொம்பவே ஷாக்காகிவிட்டனர். ஆனாலும் வேறு வழியே இல்லாமல் அஜித்துக்காக இந்த டைட்டிலை கொண்டாடி வருவதாகவும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். முன்னதாக, ஏகே 62 படத்தை லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கவிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X