முருகதாஸ் படத்தில் இணையும் 'தல', 'தளபதி'
சென்னை: அஜீத் குமார் மற்றும் விஜய்யை வைத்து முருகதாஸ் ஒரு படத்தை எடுக்கவிருக்கிறார்.
ஏ.ஆர். முருகதாஸ் எடுத்த முதல் படமான தீனாவின் ஹீரோ அஜீத் குமார். அந்த படத்திற்கு பிறகு அவர்கள் இணைந்து பணியாற்றவே இல்லை. இந்நிலையில் மீண்டும் அஜீத்தை வைத்து படம் எடுக்க ஆர்வமாக இருப்பதாக முருகதாஸ் தெரிவித்திருந்தார். அண்மையில் அவர் விஜய்யை வைத்து துப்பாக்கி படம் எடுத்தார். தற்போது அதை இந்தியில் அக்ஷய் குமாரை வைத்து ரீமேக் செய்து வருகிறார்.
இந்நிலையில் முருகதாஸ் அஜீத் மற்றும் விஜய்யை வைத்து ஒரு படம் எடுக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

ராஜாவின் பார்வையிலே
ராஜாவின் பார்வையிலே படத்திற்கு பிறகு அஜீத் குமாரும், விஜய்யும் சேர்ந்து நடிக்கவே இல்லை.

அஜீத்துடன் நடிக்க ரெடி
கதை நன்றாக இருந்தால் அஜீத்துடன் நடிக்க தயாராக இருப்பதாக விஜய் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2வது முறையாக இணையும் தல, தளபதி
முருகதாஸ் இயக்கவிருக்கும் படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜீத் குமாரும், விஜய்யும் சேர்ந்து நடிக்கின்றனர்.

ஏப்ரல் ஃபூல்
இந்த செய்தியை அப்படியே நம்பீட்டங்களா? ஏப்ரல் ஃபூல்


Click it and Unblock the Notifications











