கதை சரியில்லாட்டா அஜீத், விஜய் நடிச்சாலும் படம் ஓடாது: விக்ரமன்

By Siva

சென்னை: அஜீத், விஜய் நடித்தாலும் கதை சரியில்லை என்றால் படம் ஓடாது என்று இயக்குனர் விக்ரமன் தெரிவித்துள்ளார்.

விஜய்க்கு பெயர் வாங்கிக் கொடுத்த பூவே உனக்காக படத்தை இயக்கிய விக்ரமன் தற்போது நினைத்தது யாரோ படத்தை எடுத்து வருகிறார். தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு ஸ்டைல் வைத்திருக்கும் அவர் கார்த்திக், விஜய், சூர்யா, விஜயகாந்த், சரத் குமார் போன்ற பெரிய ஹீரோக்களை வைத்து படம் எடுத்துள்ளார்.

அவரது இயக்கத்தில் நடித்த பெரிய ஹீரோக்களுக்கு படம் ஓடியது மட்டுமில்லாமல் அவர்களுக்கு பெயரும் கிடைத்தது.

பூவே உனக்காக

பூவே உனக்காக

விக்ரமன் இயக்கத்தில் விஜய் நடித்த பூவே உனக்காக படத்தை இப்போது பார்த்தாலும் விஜயின் நடிப்பை பாராட்டத் தோன்றும். விஜயின் வாழ்க்கையில் மறக்க முடியாத படம் இது என்று கூட கூறலாம்.

சூர்ய வம்சம்

சூர்ய வம்சம்

காதலர்கள் காதலிலும் வாழ்க்கையிலும் ஜெயித்துக் காட்டுவதை அழகாக காட்டப்பட்ட படம் சூர்யவம்சம். இதில் சரத்குமார் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார்.

உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்

உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்

கார்த்திக், ரோஜா, அஜீத் குமார் நடித்த உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படப் பாடல்கள் என்றும் இனியவை ஆகும்.

வானத்தைப் போல

வானத்தைப் போல

இரட்டை வேடங்களில் விஜயகாந்த், பிரபுதேவா, லிவிங்ஸ்டன், மீனா உள்ளிட்டோர் நடித்த வானத்தைப் போல படம் அதில் நடித்த அனைவருக்குமே பெயர் வாங்கிக் கொடுத்தது என்று தான் கூற வேண்டும்.

உன்னை நினைத்து

உன்னை நினைத்து

சூர்யா, லைலா, சினேகா ஆகியோரை வைத்து விக்ரமன் எடுத்த படம் உன்னை நினைத்து. இதில் முதலில் விஜய் தான் நடிப்பதாக இருந்தது.

கதை தான் ஹீரோ

கதை தான் ஹீரோ

அஜீத் நடித்தாலும் சரி, விஜய் நடித்தாலும் சரி கதை சரியில்லை என்றால் படம் ஓடாது என்று தெரிவித்துள்ளார் விக்ரமன். ஆக படத்தின் ஹீரோ கதை தான் என்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X