தெலுங்கு ஸ்டார்களை ஓரங்கட்டிய அஜித், விஜய்...எதுல தெரியுமா
சென்னை : நேற்று ஹாஷ்டாக் டேவை ட்விட்டர் கொண்டாடியது. இதனை முன்னிட்டு இந்த ஆண்டில் அதிகம் ட்வீ ட் செய்யப்பட்ட, அதிகமுறை டிரெண்டிங் ஆக்கப்பட்ட தலைப்புகள், வைரலாக்கப்பட்ட ஹாஷ்டாக்குகளின் பட்டியலை ட்விட்டர் வெளியிட்டது.
இந்த ஆண்டு துவங்கியது முதல், அதாவது ஜனவரி 1 ம் தேதி முதல் ஜுன் 30 ம் தேதி வரையிலான 6 மாதங்களில் வைரலாக்கப்பட்ட ஹாஷ்டாக்குகளின் பட்டியலை தான் தற்போது ட்விட்டர் வெளியிட்டுள்ளது. இதில் அஜித், விஜய் தான் டாப் இடங்களில் உள்ளனர். இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அதிகமுறை டிரெண்டிங்கான வலிமை
2021 ல் முதல் 6 மாதங்களில் அதிக முறை டிரெண்டிங் ஆக்கப்பட்ட ஹாஷ்டாக்கில் முதலிடத்தில் உள்ளது அஜித் நடிக்கும் வலிமை படம் தான். அதைத் தொடர்ந்து விஜய்யின் பிளாக்பஸ்டர் படமான மாஸ்டர் படம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

டாப் 5 இடங்களில் அஜித், விஜய்
வலிமை, மாஸ்டரை தொடர்ந்து தான் தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு நடிக்கும் சர்காரு வாரி பாட படம் இடம்பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து 4வது இடத்தில் அஜித்குமார் என்ற ஹாஷ்டாக்கும், 5 வது இடத்தில் தளபதி 65 ம் இடம்பிடித்துள்ளன. டாப் 5 இடங்களை அஜித், விஜய் மட்டுமே ஆக்ரமித்துள்ளனர்.

10 வது இடத்தில் பவன் கல்யாண்
ட்விட்டர் வெளியிட்டுள்ள டாப் 10 ஹாஷ்டாக் பட்டியலில் பவன் கல்யாணின் வக்கீல் சாப் 10 வது இடத்தில் உள்ளது. ஆண்டின் துவக்கத்தில் 6 வது இடத்தில் இருந்த இந்த படம் ஜுன் மாத இறுதியில் 10 வது இடத்திற்கு தள்ளப்பட்டது.

இவங்களும் இருக்காங்க
அஜித், விஜய் ஹாஷ்டாக்குகளை தொடர்ந்து iheartawards, rubinadilaik, bts, covid19 உள்ளிட்ட ஹாஷ்டாக்குகள் ட்விட்டர் டிரெண்டிங்கில் அதிகமுறை இடம்பெற்றுள்ளன.

தெலுங்கில் விஜய் ஆதிக்கம்
தெலுங்கு ஸ்டார்களின் படங்களுக்கு இணையாக தமிழ் ஹீரோக்களின் டப் செய்யப்பட்ட தெலுங்கு படங்களும் ஹிட் ஆகி வருகின்றன. இதற்கிடையில் விஜய்யின் அடுத்த படமான தளபதி 66, தளபதி 67 ஆகிய படங்களும் தெலுங்கு படங்கள் என்று வேறு கூறப்படுகிறது. அதிலும் தளபதி 66 படத்திற்காக இதுவரை எந்த தென்னிந்திய நடிகருக்கும் வழங்காத அளவிற்கு 120 கோடி விஜய்க்கு சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அஜித் சம்பளமும் ஏறிடுச்சா
இதற்கிடையில் வலிமை படத்திற்கு பிறகு அஜித்தும் தனது சம்பள தொகையை உயர்த்தி விட்டதாக வேறு ஒரு தகவல் அடிபடுகிறது. மற்ற தென்னிந்திய நடிகர்களை ஓரங்கட்டி அஜித், விஜய்யின் படங்கள், அவர்களின் ஹாஷ்டாக்குகள் தொடர்ந்து ட்விட்டர் டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்கும் தகவல் மற்ற ஹீரோக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

டிரெண்டிங்கில் புதிய சாதனை
அதிலும் அஜித்தின் வலிமை, யாரும் தொட முடியாத அளவிற்கு அதிக முறை டிரெண்டிங் ஆக்கப்பட்டுள்ளது. அப்டேட் கேட்டே அதிக முறை டிரெண்டிங் ஆக்கப்பட்டதும் வலிமை தானாம். இதனை அஜித் நடிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். வலிமை படத்தின் இறுதிக்கட்ட ஷுட்டிங் ரஷ்யாவில் சமீபத்தில் துவங்கி, விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

விரைவில் ரிலீஸ் தேதி
அடுத்த ஓரிரு நாளில் வலிமை படத்தின் ஒட்டுமொத்த ஷுட்டிங்கும் முடிக்கப்பட்டு விட்டதாக அறிவிப்பு வர உள்ளது. அதைத் தொடர்ந்து படத்தின் இரண்டாவது சிங்கிள், டிரைலர், டீசர், முக்கியமாக ரிலீஸ் தேதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தியேட்டர்கள் திறக்கப்பட்டு விட்டதால் எந்த நேரத்திலும் வலிமை படத்தின் ரிலீஸ் தேதி வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











