என்ன, அன்பு பிக்சர்ஸ் தயாரிப்பில் அஜித், விஜய் சேர்ந்து நடிக்கிறார்களா?
சென்னை: அஜித், விஜய்யை வைத்து படம் எடுப்பது குறித்து பேசியுள்ளார் ஜெ. அன்பழகன் எம்.எல்.ஏ.
அஜித், விஜய் சேர்ந்து நடித்த காலம் மலையேறிவிட்டது. அவர்கள் இருவரையும் சேர்த்து ஒரு படத்தில் நடிக்க வைப்பது தற்போது சாதாரண விஷயம் அல்ல. இந்நிலையில் அவர்களை வைத்து தனது அன்பு பிக்சர்ஸ் மூலம் படம் தயாரிக்க விரும்புகிறார் திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன்.
இந்நிலையில் இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அஜித்
அஜித், விஜய்யை வைத்து ஒரு படம் தயாரிப்பதாக கூறினேன். இது குறித்து இருவரிடமும் பேசினேன். ஆனால் அவ்வளவு சீக்கிரம் அது நடப்பதாக இல்லை. விஜய் மட்டும் கால்ஷீட் கொடுப்பதாக கூறியுள்ளார். தனியாக நடிக்க கால்ஷீட் தருவதாக கூறினார் என அன்பழகன் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

விஜய்
அஜித், விஜய் சேர்ந்து நடித்தால் மாஸாக இருக்கும், ஆனால் அது நடக்கணுமே. நீங்கள் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் நிச்சயம் நடக்கும் என்று நெட்டிசன்கள் அன்பழகனை ஊக்குவித்துள்ளனர்.
இயக்குனர்
விஜய் கால்ஷீட் கொடுத்தால் நல்ல இயக்குனரை வைத்து படத்தை எடுக்குமாறு தளபதி ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோரிக்கை
அஜித், விஜய்யை வைத்து தான் படம் எடுப்பீர்களா? எங்கள் சூர்யா அண்ணாவை வைத்து படம் எடுக்க மாட்டீர்களா என்று பாவம் போன்று கேட்டுள்ளார் ரசிகர் ஒருவர்.


Click it and Unblock the Notifications











