மல்லுக்கட்டி ராசியான 'தல'- 'தளபதி', 'சுள்ளான்'- 'வாலு'

By Siva

ன்னை: ஒரு காலத்தில் ஆகாமல் இருந்த அஜீத்தும், விஜயும் தற்போது நல்ல நண்பர்களாக உள்ளனர். அதே போல் வார்த்தைகளால் சண்டை போட்ட தனுஷும், சிம்புவும் நாங்கள் எல்லாம் நண்பேன்டா என்று சொல்லும் அளவுக்கு ஆகிவிட்டனர்.

கோலிவுட்டில் கமல்ஹாசன் பெயரைச் சொன்னதும் நாம் அடுத்து கூறும் பெயர் ரஜினிகாந்த். ஏனென்றால் அவர்கள் இருவரும் ஒரே காலக்கட்டத்தில் ஹீரோவாக கலக்கியவர்கள். ரஜினிக்கும், கமலுக்கும் இடையே பிரச்சனை எதுவும் வந்ததில்லை. அவர்கள் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு நடந்து கொண்டனர். நாம் எப்பொழுதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் ரஜினி, நம் ரசிகர்களுக்கு இடையே சண்டை வந்துவிடக் கூடாது என்று கமல் தன்னிடம் தெரிவித்ததாக சூப்பர் ஸ்டார் ஒரு முறை கூறியுள்ளார். மேலும் கூட்டத்தோடு கூட்டமாக நடித்த தன்னை தனி ஹீரோவாக நடிக்கச் சொன்னதும் கமல் தான் என்று அவர் தெரிவித்திருந்தார்.

அவர்களுக்கு அடுத்து இளைய தளபதி விஜய்-அஜீத் குமார் உள்ளனர். அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் தாக்கிப் பேசி வந்தனர். இந்நிலையில் தான் தற்போது நண்பர்களாகிவிட்டனர். அதே போன்று தான் சுள்ளான் தனுஷும், வாலு சிம்புவும்.

தாக்கிப் பேசிய விஜய்-அஜீத்

தாக்கிப் பேசிய விஜய்-அஜீத்

அஜீத்துக்கும், விஜய்க்கும் ஒரு காலத்தில் ஆகவே ஆகாது. தங்கள் படங்களில் ஒருவரையொருவர் நக்கலடித்தும், தாக்கிப் பேசியும் வந்தனர். இதைப் பார்த்த விஜய் ரசிகர்கள் 'தல' ரசிகர்களை தாக்கிப் பேசுவதும், பதிலுக்கு அவர்களும் ஏசுவதுமாக காலம் சென்றது.

அஜீத் தொப்பையை நக்கல் அடித்த விஜய்

அஜீத் தொப்பையை நக்கல் அடித்த விஜய்

பல்வேறு விபத்துகளில் சிக்கி ஏகப்பட்ட ஆபரேஷன்கள் செய்துள்ள அஜீத் குமாருக்கு தொப்பை இருந்தது. (விஷ்ணுவர்தன் படத்திற்காக தொப்பையை கரைத்துவிட்டார்.) அதை நக்கல் அடிக்கும் வகையில் விஜய் ஒரு பாட்டில் தனது வயிற்றில் எதையோ வைத்து தொப்பை இருப்பது போன்று ஆடியிருப்பார்.

சண்டையை மறந்து ராசி

சண்டையை மறந்து ராசி

இப்படி சண்டை போட்டுக் கொண்டிருந்த அஜீத்-விஜய் ராசியாகி தற்போது நண்பர்களாகிவிட்டனர். அஜீத் ஆன்மீக வழியில் இறங்கி சாந்தமாகிவிட்டார். அதன் பிறகு அவரை அனைவரும் தலையில் தூக்கி வைத்து தான் கொண்டாடுகின்றனர்.

இந்த வாலும், சுள்ளானும் இருக்கிறாங்களே!

இந்த வாலும், சுள்ளானும் இருக்கிறாங்களே!

தனுஷும், சிம்புவுக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்தது. தனுஷுக்கு தேசிய விருது கிடைத்தபோது எனக்கு தேசிய விருதெல்லாம் வேண்டாம் விசில் போதும் என்று குத்திக்காட்டினார் சிம்பு.

கொலவெறிக்கு போட்டியா லவ் ஆன்த்தம்

கொலவெறிக்கு போட்டியா லவ் ஆன்த்தம்

தனுஷ் ஏதோ விளையாட்டா பாடிய ஒய் திஸ் கொலவெறி அவரே எதிர்பார்க்காத அளவுக்கு உலக அளவில் பிரபலமாகி பிரதமர் மன்மோகன் சிங் விருந்துக்கு அழைக்கும் ரேஞ்சுக்கு உயர்ந்தார். இதைப் பார்த்து வயித்தெரிச்சல் பட்ட சிம்பு போட்டிக்கு லவ் ஆன்த்தம் என்ற பாடலை வெளியிட்டார். ஆனால் அந்த பாட்டால் கொலவெறியை அடிச்சுக்க முடியவில்லை.

திடீர் நண்பர்கள்

திடீர் நண்பர்கள்

எலியும், பூனையுமாக இருந்த சிம்புவும், தனுஷும் துபாய் போன இடத்தில் திடீர் என்று நண்பர்களாகி நமக்கெல்லாம் அதிர்ச்சி கொடுத்தனர். ஊருக்கு திரும்பிய பிறகு சிம்பு தனது பிறந்தநாள் பார்ட்டிக்கு தனுஷை அழைத்து மேலும் அதிர்ச்சி அடைய வைத்தார். இந்நிலையில் ரஜினி, கமல் நடித்த இளமை ஊஞ்சல் ஆடுகிறது ரீமேக்கில் அவர்கள் சேர்ந்து நடிக்கவிருக்கிறார்களாம். என்னமோ, ஒற்றுமையாக இருந்தால் சரி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X