சூர்யாவுக்கு நாங்க இருக்கோம்: ஒன்று சேர்ந்த தல, தளபதி ரசிகர்கள் SuriyaFCWarnsBJPnADMK

By Siva

Recommended Video

Actor Surya: அரசாங்கம் மேல் கோபத்தை தெரிவித்த நடிகர் சூர்யா

சென்னை: சூர்யாவுக்காக தல, தளபதி ரசிகர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர்.

அகரம் அறக்கட்டளை சார்பில் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா புதிய கல்விக் கொள்கை குறித்து கருத்து தெரிவித்தார். ஆரம்ப கல்வியிலேயே மூன்று மொழிகளை திணிக்கக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார். இதனால் பாஜகவினரும், அதிமுகவினரும் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சூர்யாவின் பேச்சு வன்முறையை தூண்டிவிடும் விதமாக உள்ளது என்று பாஜக தேசிய பொதுச் செயலாளர் ஹெச். ராஜாவும், கல்விக் கொள்கை குறித்து அவருக்கு என்ன தெரியும் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் விமர்சித்துள்ளனர். சூர்யா அரைவேக்காட்டுத்தனமாக பேசுவதாக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். மேலும் சூர்யா தனக்கு தெரிந்த வேலையை மட்டும் பார்க்க வேண்டும், தெரியாத விஷயம் பற்றி பேசக் கூடாது என்றும் விமர்சித்துள்ளனர்.

சூர்யா

பாஜகவினரும், அதிமுகவினரும் ஆளாளுக்கு சூர்யாவை விளாசுவதை பார்த்த அவரின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக ட்வீட் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர் ஒன்றும் கல்வி பற்றி எதுவும் தெரியாமல் விமர்சிக்கவில்லை. சினிமாவில் சொல்வதை நிஜத்தில் செய்து கொண்டிருக்கிறார் என்று மார்தட்டுகிறார்கள் சூர்யா ரசிகர்கள்.

தல ரசிகர்கள்

கல்விக் கொள்கை விஷயத்தில் விமர்சிக்கப்படும் சூர்யாவுக்கு ஆதரவாக தல, தளபதி, சிவகார்த்திகேயன், சிம்பு ஆகியோரின் ரசிகர்களும் களத்தில் குதித்து #SuriyaFCWarnsBJPnADMK என்கிற ஹேஷ்டேகுடன் ட்வீட் செய்து கொண்டிருக்கிறார்கள்.

தளபதி

சூர்யாவையும், அவரின் ரசிகர்களையும் தளபதி ரசிகர்களுக்கு சுத்தமாக பிடிக்காது. ட்விட்டரில் சூர்யா, விஜய் ரசிகர்கள் அடிக்கடி மோதிக் கொள்வார்கள். இந்நிலையில் சூர்யாவுக்காக விஜய் ரசிகர்கள் வாய்ஸ் கொடுக்கிறார்கள். நாங்க அடிச்சுப்போம், புடுச்சுப்போம் ஆனால் பிரச்சனைன்னு வந்தால் ஒன்று சேர்ந்துவிடுவோம் என்கிறார்கள்.

விமர்சனம்

புதிய கல்விக்கொள்கை குறித்து விமர்சித்த சூர்யா ஒரு ஆன்டி இந்தியன் என்று சொல்வார்கள் பாருங்க என்கிறார்கள் ரசிகர்கள். செமயாக சண்டை போட்டுக் கொள்ளும் தல, தளபதி ரசிகர்கள் சூர்யாவுக்காக ஒன்று சேர்ந்துள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X