twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய் விருதுகள், வீரம் திரைப்படம் ஒளிபரப்பு: அஜித், விஜய் ரசிகர்களால் ரணகளமான டிவிட்டர்

    By Veera Kumar
    |

    சென்னை: விஜய் டிவி விருது கொடுத்தாலும் கொடுத்தார்கள் டிவிட்டரில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் போட்டி போட்டு தாக்கிக்கொள்கிறார்கள். இந்திய அளவிலான டிவிட்டர் டிரெண்ட்டில், கடந்த இரு நாட்களாக தமிழ் ஹீரோக்களான இவ்விருவரின் பெயர்களும் நீடிக்கிறது என்றால் அதன் தீவிரத்தை உணர்ந்து கொள்ளலாம்.

    இரு வாரம் ஒளிபரப்பு

    இரு வாரம் ஒளிபரப்பு

    திரையுலகினருக்கு விஜய் தொலைக்காட்சி ஆண்டுதோறும் 'விஜய் விருதுகள்' என்ற பெயரில் விருது வழங்கிவருகிறது. 8வது விஜய் டிவி விருது நிகழ்ச்சி, கடந்த வாரம் ஞாயிறு மற்றும் நேற்று ஆகிய இரு நாட்களிலும் விஜய்டிவியில் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணிவரை ஒளிபரப்பானது.

    நட்சத்திரங்கள் அணிவகுப்பு

    நட்சத்திரங்கள் அணிவகுப்பு

    விருது வழங்கும் விழாவில் கமல்ஹாசன், பாரதிராஜா, ஏ.ஆர்.ரகுமான், ஷங்கர், பாலா, விஜய், அர்ஜுன், குஷ்பு உள்ளிட்ட தமிழ் திரையுலகின் முக்கிய நட்சத்திரங்கள் திரளாக கலந்துகொண்டிருந்தனர். போதாத குறைக்கு, பாலிவுட் பாட்ஷா, ஷாரூக்கானும் வந்திருந்து கிரேஸ் ஏற்றினார்.

    களமிறங்கிய சன் டிவி

    களமிறங்கிய சன் டிவி

    விருது வழங்கும் விழாவை, சுமார் 2 கோடி ரசிகர்களாவது தொலைக்காட்சியில் பார்ப்பார்கள் என்பது விஜய் டிவி கணிப்பாக இருந்தது. எனவே, விஜய் டிவியின் போட்டியாளரான சன் டி.வி, ரசிகர்களை தக்க வைத்துக்கொள்ள புதுப்படங்களை களமிறக்கியது.

    ரசிகர்களை திண்டாட செய்த வீரம்

    ரசிகர்களை திண்டாட செய்த வீரம்

    கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஹரி இயக்கத்தில், சூர்யா நடித்த சிங்கம்-2 படம், மதியம் சன்.டி.வியில் ஒளிபரப்பப்பட்டது. நேற்று, சமீபத்தில் அஜீத் நடித்து சூப்பர் ஹிட்டான வீரம் ஒளிபரப்பப்பட்டது. சன் டிவியின் இந்த அதிரடியால் ரசிகர்கள் குழம்பிபோனார்கள், விஜய்டிவியின் விளம்பர இடைவேளையின்போது சன்டிவியிலும், இங்கு இடைவேளை விடும்போது விஜய்டிவியிலுமாக ரசிகர்கள் சேனல்களை மாற்றிக்கொண்டிருந்தனர்.

    அஜித் ரசிகர்கள் கண்கள் சன் டிவியில்

    அஜித் ரசிகர்கள் கண்கள் சன் டிவியில்

    இதனிடையே அஜித் ரசிகர்கள் டிவிட்டரில் வீரம் படம் குறித்து புரொமோசனே கொடுக்க தொடங்கிவிட்டனர். விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் நேற்று நடிகர் விஜய்க்கு ஃபேவரைட் ஹீரோ விருது வழங்கப்பட்டது. இதை அறிந்துகொண்ட அஜித் ரசிகர்கள், சன் டிவியில் வீரம் படம் பார்க்க வாருங்கள் என்று கூறி, பொதுவான ரசிகர்களை இழுக்க தொடங்கிவிட்டனர்.

    விஜய்டிவிக்கு செக் வைத்த வீரம்..

    விஜய்டிவிக்கு செக் வைத்த வீரம்..

    இதற்காக #VEERAM_TheCheckMateFromSunTv என்ற ஹேஸ்டேக் உருவாக்கினர். ட்விட்டரில் சில நிமிடங்கள் இது டிரெண்டாகவும் ஓடிக்கொண்டிருந்தது. "முக்கால்வாசி தமிழ் திரையுலகமும் ஒரு சேனலில் இருந்தாலும், அஜித் ஒருவரின் திரைப்படத்திற்கு அது ஈடாகவில்லையே" என்ற ரீதியில் அவர்கள் இந்த ஹேஸ்டேக்கில் கருத்துக்களை தட்டிவிட்டுக்கொண்டிருந்தனர்.

    விடுவார்களா விஜய் ரசிகர்கள்

    விடுவார்களா விஜய் ரசிகர்கள்

    விஜய்ரசிகர்கள் விடுவார்களா என்ன. #VIJAYFavHeroForever என்ற ஹேஸ்டேக்கை நேற்று இரவே உருவாக்கிவிட்டனர். நேற்றிரவு முதல் இன்று காலை வரையில் டிவிட்டரில் அது டிரெண்டாக தொடர்ந்து அசத்தியது. "செவாலியே (சிவாஜி கணேசன்) ரசிகர் முதல் செக்மேட் (அஜித்) ரசிகர்கள் வரையில் விஜய்தான் ஃபேவரைட் ஸ்டார்" என்று கூறுகிறது ஒரு டிவிட்.

    அடுத்த ரஜினி

    விஜய் டிவி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில், நடிகர் விஜய் கடைசியாக உரையாற்றியதை, ரஜினியின் பேச்சுடன் ஒப்பிட்டுள்ளார் இந்த விஜய் ரசிகர்.

    செக்குக்கே செக் வைத்தோமில்ல

    அஜித் ரசிகர்கள் செக்மேட் என்று டிரெண்ட் உருவாக்கியதை விஜய் ரசிகர்கள் முறியடித்துவிட்டதற்காக, இனிமேல் அஜித் ரசிகர்கள் செஸ் பற்றி நினைத்தும் பார்க்கமாட்டார்கள் என்று கூறுகிறது இந்த டிவிட்

    காசியப்பன் பாத்திர கடை

    கோவில் திரைப்படத்தில், காசியப்பன் பாத்திரக்கடையில், காசு கொடுத்து கப் வாங்கி வரும் கேரக்டரில் வடிவேலு நடித்திருப்பார். விஜய் டிவியிடம் நடிகர் விஜய் வாங்கிய ஃபேவரைட் ஹீரோ விருதையும், இந்த வடிவேலுவுடன் ஒப்பிட்டு, இந்த நேரத்திலும் வீரம் அதகளம் செய்து கொண்டுள்ளது என்று கீச்சிட்டுள்ளார் இந்த அஜித் ரசிகர்.

    வராமலே மாஸ்

    விஜய் டிவியில் அஜித் பெயரை சில நடிகர்கள் உச்சரிக்கும்போதோ, அல்லது போட்டிக்கான படங்களில் அஜித் நடித்த படங்கள் காண்பிக்கப்பட்டபோதோ ரசிகர்கள் கரகோசம் அடங்க நேரமானது. இதைத்தான் 'தல' தலையை காண்பிக்காமல் கூட கைதட்டுவாங்கும் ஈர்ப்பு சக்தி உள்ளவர் என்று புகழ்கிறது எந்த டிவிட்.

    ஆரோக்கியம் அவசியம் அமைச்சரே..

    ஆரோக்கியம் அவசியம் அமைச்சரே..

    விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் மோதலால், தமிழ் டிவிட்டுகள் அகில இந்திய டிரெண்டாக உருமாறியுள்ளன. இது இந்திய அளவில் திரைப்பட உலகினரை கவனிக்க செய்துள்ளது. ஆனால் இந்த போட்டி ஆரோக்கியமானதாகவும், பிறர் மனதை புண்படுத்தாததாகவும் இருந்தால்தான், பிற மாநிலத்தவர்கள் தமிழர்களை அறிவுசார் சமூகம் என்று கருதுவார்கள் என்பதை இரு ஹீரோக்களின் ரசிகர்களுமே உணர்ந்துகொள்வது நல்லது.

    English summary
    Tamil cinema heros Ajith and Vijay fans making their names in twitter trend as Vijay tv and Suntv telecast Both the heros events in repective channels.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X