தல-தளபதி ரசிகர்களின் 'சூப்பர் திட்டம்'
சென்னை: தல மற்றும் தளபதி ரசிகர்கள் ஜில்லா மற்றும் வீரம் படங்கள் வெற்றி பெற வாழ்த்தி பேனர் வைக்கிறார்கள்.
இந்த பொங்கல் பண்டிகை அன்று அஜீத்தின் வீரம் மற்றும் விஜய்யின் ஜில்லா ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின்றன. பல ஆண்டுகள் கழித்து தல, தளபதி படங்கள் ஒரே நாளில் வெளியாகின்றன.
இந்த தருணத்தில் தல, தளபதி ரசிகர்கள் என்ன திட்டமிடுகிறார்கள் என்று பார்ப்போம்.

தளபதி
விஜய் ரசிகர்கள் ஜில்லா படம் வெற்றி பெற வாழ்த்தி சென்னையின் பல்வேறு பகுதிகளில் பிரமாண்டமாக பேனர்களை வைக்க திட்டமிட்டுள்ளனர். இந்த பேனர்களில் அஜீத்தின் வீரம் வெற்றி பெறவும் வாழ்த்தவிருக்கிறார்கள்.

தல
அஜீத்தின் ரசிகர்கள் தாங்கள் வைக்கவிருக்கும் பேனர்களில் விஜய்யின் ஜில்லா வெற்றி பெற வாழ்த்த திட்டமிட்டுள்ளனர். தல, தளபதி ரசிகர்களின் இந்த திட்டம் பலரின் பாராட்டை பெற்றுள்ளது.

ரசிகர் மன்றம்
அஜீத் ரசிகரான சச்சின் மணி கூறுகையில், தியேட்டர்களில் ரசிகர்களிடையே மோதல் ஏற்பட விரும்பவில்லை. அதனால் வீரம் பேனர்களில் விஜய்யின் ஜில்லாவும் வெற்றி பெற வாழ்த்துகிறோம் என்று எழுதவிருக்கிறோம் என்றார்.

ஆரம்பம்
அஜீத்தின் ஆரம்பம் படம் ரிலீஸாவதற்கு முன்பு அந்த படம் வெற்றி பெற வாழ்த்தி மதுரையில் விஜய் ரசிகர்கள் பேனர் வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











