தல, தளபதி ரசிகர்களை ஒன்று சேர்த்த விஜயகாந்த்

By Siva

சென்னை: விஜயகாந்த் விஷயத்தில் மட்டும் தல, தளபதி ரசிகர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர்.

நிஜ வாழ்க்கையில் அஜித்தும், விஜய்யும் மட்டும் அல்ல அவர்களின் குடும்பத்தாரும் நண்பர்களாக உள்ளனர். இது தெரிந்தும் கூட சமூக வலைதளங்களில் தல, தளபதி ரசிகர்கள் மோதிக் கொள்கிறார்கள்.

இவர்கள் சண்டை போடுவதற்காக ஹேஷ்டேக் உருவாக்கி அதை ட்விட்டரில் டிரெண்டாக்கிவிடுகிறார்கள். அந்த ஹேஷ்டேகுகளுக்கு அர்த்தம் புரியாமல் வெளிநாட்டவர்கள் குழம்பிய சம்பவம் எல்லாம் நடந்துள்ளது.

பலனில்லை

பலனில்லை

சமூக வலைதளங்களில் இப்படி மோத வேண்டாம் என்று பலர் கூறியும் அஜித், விஜய் ரசிகர்கள் கேட்கவில்லை. இந்த சண்டை ஓயவே ஓயாத சண்டை என்று முடிவுக்கு வந்துவிட்டனர் நெட்டிசன்கள். அந்த அளவுக்கு தினம் தினம் மோதிக் கொள்கிறார்கள். இந்நிலையில் அவர்கள் ஒன்று சேர்ந்த அதிசயங்கள் அவ்வப்போது நடக்கும். அந்த அதிசயம் தற்போது நடந்துள்ளது.

விஜயகாந்த்

அன்னை மண்ணில் வரலாறு காணாத கடும் குளிர் என்று கேள்விப்படும் போது, அமெரிக்க குளிரில் என்னால் அதை உணர முடிகிறது !
#winter என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் ட்வீட் செய்ததை பார்த்து தான் தல, தளபதி ரசிகர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர்.

கேப்டன்

உடல்நலம் பாதிக்கப்பட்ட விஜயகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். அவர் விரைவில் குணமடைந்து நாடு திரும்ப வேண்டும் என்று அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். கேப்டன் விஷயத்தில் அவர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர்.

அஜித் ரசிகர்கள்

விஜயகாந்த் விரைவில் பழைய பன்னீர்செல்வமாக ஊர் திரும்ப வேண்டும் என்பதே அஜித், விஜய் ரசிகர்களின் விருப்பம். விஜயகாந்த் நலம்பெற வேண்டும் என்று அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் பிரார்த்தனை செய்கிறார்கள். அது தான் கேப்டனின் சிறப்பு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X