Ajith Vijay:"விஜய்யோட முடிவு அதுதானா..? அப்போ அஜித் தான் அடுத்த சூப்பர் ஸ்டார்”: பரபரக்கும் கோலிவுட்

சென்னை: தளபதி 68 படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்து கார்த்திக் சுப்புராஜ்ஜுடன் கூட்டணி வைக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேநேரம் விஜய்யின் முடிவுக்காக அஜித் காத்திருப்பதாகவும், அதன்பின்னர் ரியல் சம்பவம் நடக்கும் என்றும் சினிமா செய்தியாளர் செய்யாறு பிரபலம் ட்விஸ்ட் வைத்துள்ளார்.

விஜய் முடிவுக்காக காத்திருக்கும் அஜித்
எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல் வரிசையில் விஜய் - அஜித் தான் தற்போதைய கோலிவுட் மாஸ் ஹீரோக்கள். இருவருமே ஒரே காலக்கட்டத்தில் சினிமாவில் நடிக்கத் தொடங்கி தற்போது டாப் ஹீரோக்களாக கலக்கிக் கொண்டிருக்கின்றனர். விஜய்யின் ஆரம்பகால கேரியரில் அவரது அம்மா, அப்பா சப்போர்ட் இருந்தாலும், தனது திறமையால் தான் முன்னணி நடிகரானார்.

 Ajith Vijay: If Vijay goes into politics... Ajith will be a superstar!

அதேபோல் அஜித் எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் அறிமுகமானாலும், அதன்பின்னர் தனது தன்னம்பிக்கை, விடாமுயற்சி போன்றவற்றால் இப்போது சம்பவம் செய்து வருகிறார். 1990களில் தொடங்கிய விஜய் - அஜித் போட்டி, 2010 வரையும் நெருப்பு போல வெடித்துச் சிதறியது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பைக் டூர் செல்வதில் ஆர்வம் காட்டி வரும் அஜித், வருடத்திற்கு ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.

அதேநேரம் விஜய் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. பீஸ்ட் வெளியாகும் முன்பே வாரிசு படத்தில் கமிட்டானார். வாரிசு ரிலீஸாகும் முன்னர் லியோ ஷூட்டிங்கில் பிஸியாகிவிட்டார். தற்போதும் லியோ வெளியாவதற்கு முன்பே தளபதி 68ல் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார். விஜய் அடுத்தடுத்து படங்களில் வேகமாக நடித்து வருவதே, அவர் அரசியலில் களமிறங்க முடிவு செய்துள்ளதால் தான் என சொல்லப்படுகிறது.

அதாவது தளபதி 68க்குப் பின்னர் அவர் உடனடியாக அடுத்த படத்தில் நடிக்க மட்டார் எனத் தெரிகிறது. இரண்டு ஆண்டுகள் நடிப்பதை விட்டுவிட்டு அரசியலில் களமிறங்கவுள்ளாராம். அதேநேரம் விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் அஜித், அடுத்தடுத்து ஆதிக் ரவிச்சந்திரன், வெற்றிமாறன், சுதா கொங்கரா படங்களில் நடிக்கவுள்ளாராம். ஒருவேளை விஜய் அரசியலுக்குச் சென்றுவிட்டால் அஜித் தான் அடுத்த சூப்பர் ஸ்டார். தனிக்காட்டு ராஜாவாக கலக்கப் போகிறார் என அஜித் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் சினிமா செய்தியாளர் செய்யாறு பாலு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X