மங்காத்தா 2ல் அஜீத், விஜய் சேர்ந்து நடித்தால் படத் தயாரிப்பாளராக நான் ரெடி: ஜெ அன்பழகன்

By Siva

சென்னை: மங்காத்தா 2 படத்தில் அஜீத்தும், விஜய்யும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று திமுக எம்.எல்.ஏ. ஜே. அன்பழகன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜீத் குமார் நடித்த படம் மங்காத்தா. இந்த படத்தின் மூலம் தான் அஜீத்தின் சால்ட் அன்ட் பெப்பர் லுக் மிகவும் பிரபலம் ஆனது. இதையடுத்து அவர் தொடர்ந்து சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் நடித்து வருகிறார்.

மங்காத்தா 2ம் பாகம் எடுக்கும் திட்டம் உள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இது குறித்து திமுக எம்.எல்.ஏ. ஜே. அன்பழகன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

மங்கத்தா 2

மங்கத்தா 2

மங்கத்தா 2ம் பாகத்தில் விஜய்யும், அஜீத்தும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று அன்பழகன் தெரிவித்துள்ளார்.

விருப்பம்

அஜீத், விஜய் சேர்ந்து நடித்தால் அந்த படத்தை தயாரிப்பீர்களா என்று ஒருவர் ஜே. அன்பழகனிடம் ட்விட்டரில் கேட்டார்.

அன்பு பிக்சர்ஸ்

அஜீத் மற்றும் விஜய் சேர்ந்து நடித்தால் அந்த படத்தை எனது அன்பு பிக்சர்ஸ் பேனரில் தயாரிக்க நான் எப்பொழுதுமே தயாராக உள்ளேன் என்று அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தலைவா

தலைவா

விஜய்யின் தலைவா படம் ரிலீஸாவதில் பிரச்சனை ஏற்பட்டபோது அதை வெளியிடத் தான் தயாராக இருப்பதாக அன்பழகன் முன்பு ட்விட்டரில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X