சிம்புவின் வாலு படத்தில் பைக் ஓட்டும் அஜீத், விஜய்
சென்னை: சிம்புவின் வாலு படத்தில் விஜய்யும், அஜீத்தும் உள்ளனர் என்று உங்களுக்கு தெரியுமா?
விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம் நடித்துள்ள படம் வாலு. படத்தில் வரும் லவ் என்றவன் பாடல் டீஸர் காதலர் தினத்தன்று வெளியிடப்பட்டது.
அந்த டீஸருக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

இசை
காதலர் தினத்தன்று வாலு படத்தின் இசை வெளியிடப்பட வேண்டியது. ஆனால் ஒரு பாடலின் டீஸரை மட்டும் வெளியிட்டுள்ளனர்.

படப்பிடிப்பு
படத்தில் மீதமுள்ள காட்சிகளை விரைந்து படமாக்கி வருகின்றனர். இந்நிலையில் நேற்று சென்னை தி. நகரில் உள்ள அக்கார்ட் ஹோட்டல் அருகே ஒரு காட்சியை படமாக்கினர்.

தல, தளபதி
சிம்பு பைக் ஓட்ட பின்னால் சந்தானம் உட்கார்ந்து செல்லும் காட்சி படமாக்கப்பட்டது. அந்த காட்சியில் சிம்பு அஜீத் குமாரின் மாஸ்கையும், சந்தானம் விஜய் மாஸ்கையும் அணிந்திருந்தனர்.

சிம்பு
காதலர் தினத்தன்று வாலு பட பாடல் டீஸர் வெளியானது. அவரது காதலி ஹன்சிகாவோ காதலர் தினத்தை சிம்புவோடு கொண்டாடாமல் தனியாக கொண்டாடியுள்ளார்.

விஜய்
சிம்புவின் தங்கை இலக்கியா திருமண வரவேற்பில் இளையதளபதி விஜய் கலந்து கொண்டார். அப்போது எடுத்த புகைப்படத்தை சிம்பு ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











