»   »  டி.ஆரின் "புலி" பேச்சு... அது தான் 'தல'ன்னு சொன்ன விஜயகுமார்... இதுல எது பெஸ்ட்?

டி.ஆரின் "புலி" பேச்சு... அது தான் 'தல'ன்னு சொன்ன விஜயகுமார்... இதுல எது பெஸ்ட்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத்தை புகழ்ந்து நடிகர் விஜயகுமார் பேசியது உங்களுக்கு பிடித்துள்ளதா இல்லை இளைய தளபதி விஜய்யை புகழ்ந்து தள்ளிய டி. ராஜேந்தரின் "புலி"ப் பேச்சு பிடித்துள்ளதா?

நடிகர்கள் சக நடிகர்கள் மீது பொறாமை கொண்டு ஏதாவது வில்லங்கம் செய்யாமல் அவர்களை ஊக்குவிப்பது திரையுலகிற்கு நல்லது. இளைய தளபதி விஜய்யும் சரி, தல அஜீத்தும் சரி சக நடிகர்களை பாராட்டி ஊக்குவிக்க தவறுவது இல்லை. மேலும் யாருக்காவது உதவி தேவைப்பட்டாலும் சத்தமில்லாமல் செய்வார்கள்.

அத்தகைய அஜீத்தையும், விஜய்யையும் சீனயர்களான டி. ராஜேந்தர் மற்றும் விஜயகுமார் பாராட்டியுள்ளனர்.

ராஜேந்தர்

ராஜேந்தர்

ராஜேந்தர் புலி படத்தின் இசையமைப்பு விழாவில் காட்டில் இருக்கலாம் ஆயிரம் புலி ஆனால் இந்த புலி அட்மைர் பண்ற புலி, அட்டாக் பண்ற புலி, அட்டகாசமான புலி, அசத்தலான புலி, அசுர புலி, அசரா புலி, அற்புத புலி, அபூர்வ புலி என்று புகழ்ந்து தள்ளிவிட்டார்.

வாலு

வாலு

தலைவா படத்திற்கு பிரச்சனை வந்தபோது அண்ணா ஒரு தமிழனாக நான் உங்கள் பின்னால் இருக்கிறேன் என்று சிம்பு ட்விட்டரில் போட்டதை மனதில் வைத்துக் கொண்டு அனைத்தும் மறக்கக் கூடிய உலகில் சிம்புவின் வாலு படத்திற்கு வந்த பிரச்சனையை தீர்த்து வைத்துள்ளார் என டி. ராஜேந்தர் கூறினார்.

பாராட்டு

பாராட்டு

தனது மகனின் படம் பிரச்சனையில் சிக்கியபோது விஜய் தானாக வந்து உதவிய குணத்தை ராஜேந்தர் தனக்கு உரிய பாணியில் பேசி விஜய்யே அண்ணா, போதுங்கண்ணா, விடுங்கண்ணான்னு சொல்லும்படி செய்துவிட்டார்.

அஜீத்

அஜீத்

அருண் விஜய் நடித்துள்ள குற்றம் 23 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஜயகுமார் சக நடிகனின் வளர்ச்சியைப் பார்த்து மகிழ்பவர் அஜீத் என தெரிவித்துள்ளார்.

தல

தல

அருண் விஜய் மேல் நம்பிக்கை வைத்து அஜித்தும் என்னை அறிந்தால் படத்திற்கு ஓகே சொன்னார். அதனால், அஜித்துக்கும் நான் நன்றி சொல்லியே ஆகவேண்டும். சக நடிகனின் வளர்ச்சியை கண்டு மற்ற நடிகர் சந்தோஷப்பட வேண்டும். அப்படி சந்தோஷப்படுபவர் தான் அஜித், அது தான் தல. அவருக்கு என்னுடைய நன்றிகள் என்று கூறியுள்ளார் விஜயகுமார்.

எது பிடிச்சிருக்கு?

எது பிடிச்சிருக்கு?

விஜய்யை பற்றி டி. ராஜேந்தர் பேசியது உங்களுக்கு பிடித்திருக்கிறதா இல்லை அஜீத்தை பற்றி விஜயகுமார் பேசியது உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

English summary
Director-actor T. Rajendhar praised Ilaya Thalapathy Vijay, while senior actor Vijayakumar appreciated Thala Ajith for his generosity. Which of these speeches do you like the best?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil