Ajith Vijay: விஜய், அஜித்துடன் வெங்கட் பிரபு எடுத்த போட்டோ... அதோட பின்னணி என்னன்னு தெரியுமா..?
சென்னை: விஜய்யின் தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.
அஜித்துக்கு மங்காத்தா படத்தை ஹிட் கொடுத்தது போல, விஜய்க்கு தளபதி 68 இருக்க வேண்டும் என அவர் தீயாக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், மங்காத்தா ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த போது விஜய், அஜித்துடன் வெங்கட் பிரபு எடுத்துக்கொண்ட போட்டோ வைரலானது.
ரசிகர்களிடம் செம்ம வைப் கொடுத்த அந்த போட்டோ குறித்த பின்னணி தற்போது தெரியவந்துள்ளது.
விஜய், அஜித் போட்டோவின் ரகசியம்
மாநாடு, மன்மத லீலை, கஸ்டடி என அடுத்தடுத்து மூன்று படங்களை இயக்கினார் வெங்கட் பிரபு. அதே வேகத்தில் தற்போது விஜய்யின் தளபதி 68 படத்தை இயக்கி வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில், விஜய்யுடன் மைக் மோகன், டாப் ஸ்டார் பிரசாந்த், பிரபுதேவா ஆகியோரும் லீடிங் ரோலில் நடித்து வருகின்றனர்.
முன்னதாக விஜய் - அஜித் இருவரையும் ஒரே படத்தில் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின. அஜித்தின் 50வது படமான மங்காத்தா ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. இந்தப் படத்தை வெங்கட் பிரபு தான் இயக்கியிருந்தார். அஜித் ஆன்டி ஹீரோவாக நடித்த மங்காத்தாவில், அர்ஜுனும் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். மங்காத்தா கதை தெரிந்திருந்தால், அர்ஜுன் கேரக்டரில் தானே நடித்திருப்பேன் என விஜய் கூறியிருந்தார்.
அதேபோல், மங்காத்தா வெளியான போது விஜய், அஜித் இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோவும் செம்ம வைரலானது. அந்தப் போட்டோவில் இயக்குநர் வெங்கட் பிரபுவும் உடனிருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது முதல் விஜய், அஜித் இருவரும் சேர்ந்து நடிக்க தன்னிடம் சூப்பரான ஸ்க்ரிப்ட் இருப்பதாக வெங்கட் பிரபு கூறியிருந்தார். இதனால், தளபதி 68 அபிஸியல் அப்டேட் வெளியானதும், விஜய் - அஜித் நடிக்கும் பான் இந்தியா படத்தை எனது மகன் வெங்கட் பிரபு இயக்குவார் என கங்கை அமரன் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதற்கெல்லாம் காரணமாக அமைந்த விஜய், அஜித், வெங்கட் பிரபுவின் போட்டோ குறித்து தற்போது தெரியவந்துள்ளது. அதாவது மங்காத்தா படப்பிடிப்பு நடந்து வந்த அதே ஸ்டுடியோவில், விஜய்யின் வேலாயுதம் படத்தின் ஷூட்டிங்கும் நடைபெற்றுள்ளது. அப்போது பிரேக் டைமில் அஜித்திடம் சென்ற வெங்கட் பிரபு, பக்கத்து செட்டில் விஜய் இருப்பதாகவும், அவருடன் நீங்கள் ஒரு போட்டோ எடுத்துக் கொண்டால் நன்றாக இருக்கும் எனவும் கூறினாராம்.
உடனே அதற்கு சம்மதம் சொன்ன அஜித், வேலாயுதம் ஸ்பாட்டிற்கு சென்றுள்ளார். இதனை எதிர்பார்க்காத வேலாயுதம் படக்குழு, விஜய் கேரவனில் இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனையடுத்து கேரவன் அருகே அஜித் செல்ல, இதனையறிந்த விஜய் பதறியடித்து வெளியே வந்துள்ளார். அஜித்தை பார்த்ததும் உற்சாகமானதோடு, சொல்லிருந்தா நானே வந்திருப்பேன் அண்ணா, என்ன விஷயம் எனக் கேட்டுள்ளார்.
அதன்பிறகே, வெங்கட் பிரபு நம் இருவருடனும் போட்டோ எடுத்துக்கொள்ள விரும்புகிறார் என விஜய்யிடம் அஜித் கூறியுள்ளார். ஆனால், வெங்கட் பிரபுவோ விஜய்யையும் அஜித்தையும் மட்டுமே போட்டோ எடுக்க நினைத்திருந்தாராம். அஜித் இப்படி சொன்னதும் மகிழ்ச்சியில் உற்சாகமான வெங்கட் பிரபு, விஜய், அஜித் இருவருடனும் போட்டோ எடுத்துள்ளார். இந்த சம்பவத்தில் வெங்கட் பிரபுவுக்கே சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் அஜித்.


Click it and Unblock the Notifications











