அஜித்துடன் மோதிவிட்டு தன்ஷிகாவுடன் மோதுவது...: மனம் திறந்த கபீர் சிங்
சென்னை: யோகி டா படத்தில் தன்ஷிகாவுடன் மோதுகிறார் கபீர் சிங்.
கவுதம் கிருஷ்ணா இயக்கத்தில் சாய் தன்ஷிகா நடித்து வரும் படம் யோகி டா. ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தின் ஸ்டண்ட் காட்சிகளில் தன்ஷிகா டூப் போடாமல் அவரே நடிக்கிறார்.
இந்த படத்தில் தன்ஷிகாவுக்கு வில்லனாக வேதாளம் படத்தில் அஜித்துடன் மோதிய கபீர் சிங் நடித்து வருகிறார். தன்ஷிகாவுடன் மோதுவது குறித்து அவர் பேட்டி அளித்துள்ளார்.

பேட்டியின்போது அவர் கூறியதாவது,
நான் சேகர் பாபு என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். எதையாவது செய்து யோகியை தோற்கடிக்க வேண்டும் என்பது போன்று உள்ளது என் கதாபாத்திரம். அஜித் சார் போன்ற பெரிய ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்துவிட்டு ஒரு ஹீரோயினுடன் மோதுவது வித்தியாசமாக உள்ளது. கிளைமாக்ஸ் சண்டை உள்பட பல ஸ்டண்ட் காட்சிகளை படமாக்கியுள்ளோம்.
இது எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் என்கிறார்.


Click it and Unblock the Notifications