அஜீத்- விஷ்ணுவர்த்தன் படத்தின் டீஸர் மே 1ல் வெளியீடு

இந்த டீஸருக்கான பின்னணி இசையை யுவன் சங்கர்ராஜா இசை அமைத்து முடித்துவிட்டராம்.
இதுபற்றி ட்விட்டரில் தகவல் வெளியிட்டுள்ள யுவன், அஜீத் ரசிகர்களுக்கு ஓர் நற்செய்தி. 'தல' படத்தின் புதிய டீஸருக்காக இயக்குநர் விஷ்ணு உடன் வேலை பார்த்தேன்.
படத்தின் இறுதிக் காட்சிகள் ராஜஸ்தானில் படம்பிடிக்கப்பட்டு வருகிறது. பிறந்தநாள் தினத்தில் கூட அஜீத் ஓய்வெடுக்காமல் படத்தில் நடிக்க இருக்கிறார். படத்தின் டீஸர் மே 1ல் வெளியாகி ரசிகர்களை மகிழ்விக்க இருக்கிறது என்று ட்டிவிட்டியுள்ளார் யுவன் சங்கர் ராஜா.
டீஸர் வெளியிடுவது இருக்கட்டும் மொதல்ல படத்தோட டைட்டிலை சொல்லுங்கப்பா என்கின்றனர் ரசிகர்கள்.
Comments


Click it and Unblock the Notifications