மலேசியாவில் மீண்டும் திறக்கப்பட்ட தியேட்டர்கள்.. வெல்கம் ட்ரீட்டாக விஸ்வாசம், கோமாளி ரீரிலீஸ்!

சென்னை: அஜித் மற்றும் ஜெயம் ரவியின் படங்கள் மலேசியாவில் மீண்டும் ரிலிஸ் ஆகவுள்ளது.

Recommended Video

Shocking! Why Ajith avoids crowd | Alisha Abdullah

கொரோனா வைரஸின் தாக்கத்தால் உலக நாடுகள் பலவும் முடங்கியுள்ளது. அமெரிக்கா, இந்தியா உட்பட பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸால் உலகம் முழுக்க ஒரு கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

மெல்ல இயல்பு நிலை

மெல்ல இயல்பு நிலை

சில நாடுகளில் இன்னமும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக மக்கள் பொது இடங்களில் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் தியேட்டர்கள், மால்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா கட்டுக்குள் வந்துள்ள சில நாடுகளில் மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.

தமிழ் படங்கள்

தமிழ் படங்கள்

அந்த வகையில் மலேசியாவில் கடந்த 9ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. இதன் வெல்கம் ட்ரீட்டாக அஜித்தின் விஸ்வாசம் படம் மீண்டும் திரையிடப்பட்டுள்ளது. இதேபோல் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படம் மீண்டும் திரையிடப்பட்டுள்ளது.

விஸ்வாசம் கோமாளி

விஸ்வாசம் கோமாளி

அதுவும் கட்டணம் இல்லாமல் ஃபிரி ஷோவாக திரையிடப்பட்டுள்ளது. இதனை கோமாளி படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கராஜன் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். விஸ்வாசம் மற்றும் கோமாளி திரைப்படங்கள் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆகி பட்டைய கிளப்பின.

ஃபேமிலி ஆடியன்ஸ்

ஃபேமிலி ஆடியன்ஸ்

விஸ்வாசம் திரைப்படம், அஜித் மற்றும் இயக்குநர் சிவா கூட்டணியில் உருவான நான்காவது படம் ஆகும். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான இப்படம் அஜித்தின் ரசிகர்கள் மட்டும் ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியிலும் வரவேற்பை பெற்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X