Exclusive - சிம்பு படம் பிடிக்காமல் பாதியில் கிளம்பிப்போன அஜித்.. விஜய் செய்தது என்ன தெரியுமா?
சென்னை: சிம்பு இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் நடித்துவருகிறார். இதனை முடித்துவிட்டு அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறார். இந்த இரண்டு படங்களையும் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலும் ஒரு படத்தில் அவர் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிம்புவின் படம் பிடிக்காமல் அஜித் பாதியிலேயே கிளம்பி போன சம்பவம் தெரியவந்திருக்கிறது.
சிம்பு இப்போது திரைத்துறையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறார். அவர் நடித்த மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. கமலுடன் மணிரத்னம் இயக்கத்தில் நடித்த தக் லைஃப் படம்தான் தோல்வியை சந்தித்துவிட்டது. கண்டிப்பாக அப்படம் முரட்டு சம்பவம் செய்யும் என்று எஸ்டிஆர் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். அப்படி நடக்காமல் போனது அவர்களுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்துவிட்டது. இருந்தாலும் அதில் சிம்பு ஹீரோவாக நடிக்காததால் கொஞ்சம் ஆசுவாசப்பட்டுக்கொண்டார்கள்.
வெற்றிமாறனுடன் அரசன்: சூழல் இப்படி இருக்க வெற்றிமாறனுடன் சிம்பு எப்போது இணைவார் என்று கடந்த பல வருடங்களாகவே ஒரு எதிர்பார்ப்பு நிலவிவந்தது. வடசென்னையில் அந்தக் கூட்டணி அமைந்தாலும்; பாதியிலேயே முடிந்துவிட்டது. இப்போது அவர்கள் இரண்டு பேரும் அரசன் படத்தில் இணைந்திருக்கிறார்கள். அதன் ஷூட்டிங் மதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நடந்துவருகிறது. இதில் விஜய் சேதுபதியும் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்த படங்கள்: அரசன் படத்தை முடித்துவிட்டு அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும், தேசிங்கு பெரியசாமி இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இவ்விரண்டு படங்களையும் முடித்துவிட்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவும் கமிட்டாகியிருப்பதாக ஒரு தகவல் ஓடுகிறது. இப்படி செம பிஸியாக இருக்கும் சிம்புவை பார்த்து அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். விஜய் அரசியலுக்கு சென்றுவிட்டார், அஜித் ரேஸில் கவனம் செலுத்துவதால் இனிமேல் தமிழ் சினிமா சிம்புவின் கன்ட்ரோல்தான் என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.
அஜித்தின் தீவிர ரசிகர்: இதற்கிடையே அஜித்தின் தீவிர ரசிகர் சிம்பு. மன்மதன், சிலம்பாட்டம் ஆகிய படங்களில் எல்லாம் அஜித்தின் ரெஃபரன்ஸையும் அவர் வைத்திருந்தார். குறிப்பாக சிலம்பாட்டம் படத்தில் பில்லா அஜித் கெட்டப்பிலேயே ஒரு சீனில் நடித்திருந்தார். அது அப்போதைக்கு பெரிய கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்நிலையில் அந்தப் படம் பிடிக்காமல் அஜித் பாதியிலேயே சென்றுவிட்டதாக தயாரிப்பாளர் டி.ஆர்.ரமேஷ் கூறியுள்ளார்.
டி.ஆர்.ரமேஷ் பேட்டி: ஃபில்மிபீட் தமிழுக்கு அவர் கொடுத்த பேட்டியில், "அஜித்துக்கும், விஜய்க்கும் சிலம்பாட்டம் படத்தின் ஷோ ஒன்றை திரையிட்டார் சிம்பு. ஆனால் படத்தை பார்த்து பிடிக்காததால் அஜித் பாதியிலேயே சென்றுவிட்டார். விஜய் முழுவதுமாக பார்த்து பாராட்டினார். அதில் விஜய்யை தாக்கவும் செய்திருப்பார்கள். ஆனால் அவர் அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. அஜித் சுயநலத்தின் உச்சம். விஜய் பொதுநலத்தின் உச்சம்" என்றார்.


Click it and Unblock the Notifications











