ரசிகர்கள் சந்தோசப்படுவாங்க.. வேண்டுமென்றே போட்டோக்களை வெளியிட சொன்ன அஜித்.. இதுதான் பின்னணியா!
நடிகர் அஜித் தற்போது புதிதாக வெளியிட்டு இருக்கும் புகைப்படங்களுக்கு பின் பல காரணங்கள் இருக்கிறது என்று அவரது ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள்.
Recommended Video
சென்னை: நடிகர் அஜித் தற்போது புதிதாக வெளியிட்டு இருக்கும் புகைப்படங்களுக்கு பின் பல காரணங்கள் இருக்கிறது என்று அவரது ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள். முக்கியமான ஒரு விஷயத்தால்தான் அஜித் இப்படி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் என்கிறார்கள்.
நடிகர் அஜித் குறித்து கடந்த சில நாட்களாக வரிசையாக செய்திகள் வெளியான வண்ணம் இருக்கிறது. நடிகர் அஜித் நடக்கும் வலிமை படம் மே மாதம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான சென்னை படப்பிடிப்பு இப்போதுதான் முடிந்தது. இன்னும் சில நாட்களில் ஹைதராபாத் படப்பிடிப்பு நடக்க உள்ளது.

என்ன படம்
இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை படம் பெரிய வரவேற்ப்பை பெற்றது. இதையடுத்து நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் எச். வினோத் மீண்டும் சேர்ந்து படம் எடுத்து வருகிறார்கள். மீண்டும் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு வலிமை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

போலீஸ் எப்படி
இந்த படத்தில் அஜித் போலீஸ் ரோலில் நடிக்கிறார். இந்த படத்திற்காக நடிகர் அஜித் உடம்பை குறைத்து வருகிறார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது. து. சென்னையில் நடந்த இந்த ஷூட்டிங்கில் நடிகர் அஜித்திற்கு காயம் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால் அஜித் சிறிய முதலுதவி சிகிச்சையுடன் தனது ஷூட்டிங்கை தொடர்ந்து நடத்தி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

என்ன புகைப்படம்
இந்த நிலையில்தான் இன்று அஜித் தனது வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. தங்கள் வீட்டு உறவினர் ஒருவரின் திருமண விழாவில் அவர் கலந்து கொண்ட வீடியோ ஆகும் இது. இந்த வீடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. அதேபோல் அவர் கருப்பு உடையில் இருக்கும் புகைப்படமும் இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.

எல்லோரும் வேண்டினார்கள்
அஜித் ஷூட்டிங் ஸ்பாட்டில் காயம் அடைந்த போது, அவரை குறித்து ரசிகர்கள் அதிகம் கவலை அடைந்தனர். அஜித் சீக்கிரம் குணம் அடைய வேண்டும் என்று டிவிட்டரில் டிரெண்ட் செய்தனர். அதேபோல் அஜித் குறித்து பலர் சோகமாக வீடியோ வெளியிட்டனர். அதேபோல் அஜித் தொடர்பாக நிறைய வதந்திகளும் வெளியான வண்ணம் இருந்தது.

ஆனால் முடிவு
இதையடுத்துதான் அஜித் தற்போது நலமுடன் இருக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. பொதுவாக அஜித் தனது குடும்ப விழாவில் எடுக்கும் புகைப்படங்களை வெளியே செல்லாமல் பார்த்துக் கொள்வார். ஆனால் இந்த புகைப்படங்களை அஜித் வேண்டும் என்றே வெளியே விட்டு இருக்கிறார்.

ரசிகர்கள் வேண்டுகோள்
ரசிகர்கள் தன்னுடைய புகைப்படத்தை பார்த்தால் நிம்மதியாக இருப்பார்கள். அவர்கள் இரண்டு நாட்களாக கவலையில் இருக்கிறார்கள். இதை பார்த்தால் சந்தோசம் அடைவார்கள். அதனால்தான் புகைப்படத்தை அஜித் வெளியிட்டார் என்று அவருக்கு நெருக்கமானவர் தெரிவிக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











