என்னை பார்த்து மிரண்டு போனார் அஜித்... நடிகர் சூரி!

சென்னை: நடிகர் சூரி காமெடியனாக இருந்து இப்பொழுது ஹீரோவாகவும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்

அசுரன் வெற்றியைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் விடுதலை திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்

இந்த நிலையில் சூரியின் சிக்ஸ் பேக் ஸ்டில்ஸ் பார்த்துவிட்டு அஜித் மிரண்டு போய் பாராட்டியுள்ளார்.

பரோட்டா சூரி

பரோட்டா சூரி

ஒரு சிறிய கிராமத்தில் இருந்து சினிமாவின் மீது இருந்த காதல் காரணமாக பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் தலையை காட்டி நடித்து வந்த நடிகர் சூரி இப்போது தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த காமெடியனாக வலம் வந்து கொண்டு உள்ளார். இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தில் பரோட்டா காமெடியில் இவர் நடித்தது மிகவும் பிரபலமானது. வெண்ணிலா கபடிக்குழு படத்திற்கு பிறகு பலரும் இவரை பரோட்டா சூரி எனவே அழைத்து வந்தனர்.

ரசிகர்களின் ஃபேவரைட்

ரசிகர்களின் ஃபேவரைட்

அஜித்,விஜய்,ரஜினி என தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி வந்த சூரி பெரும்பாலும் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்களில் கட்டாயமாக இடம் பெறுகிறார்.அந்த வகையில் ரஜினிமுருகன்,சீமராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே,நம்ம வீட்டு பிள்ளை மற்றும் தற்போது உருவாகிவரும் டான் ஆகிய படங்களில் தொடர்ந்து சிவகார்த்திகேயன் படங்களில் சூரி நடித்து வருகிறார். சூரி மற்றும் சிவகார்த்திகேயன் காம்போ ரசிகர்களின் ஃபேவரைட்டாக இருந்து வருகிறது.

விடுதலை என்ற படத்தில் தான் ஹீரோவாக

விடுதலை என்ற படத்தில் தான் ஹீரோவாக

இதுவரை காமெடியனாக மட்டுமே நடித்துக் கொண்டிருந்த நடிகர் சூரி சந்தானம், யோகி பாபு, வடிவேலு, விவேக் ஆகியோர் வரிசையில் இப்பொழுது ஹீரோவாக அறிமுகமாகிறார். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் விடுதலை என்ற படத்தில் தான் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக ஜிவி பிரகாஷ் குமாரின் தங்கை பவானிஸ்ரீ நடித்து வருகிறார். விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் இப்படத்தில் நடித்துள்ளார்

சிறிய காட்சிக்காக சிக்ஸ்பேக்

சிறிய காட்சிக்காக சிக்ஸ்பேக்

முற்றிலும் வித்தியாசமான கதை களத்தில் உருவாகிவரும் விடுதலை படப்பிடிப்பு இப்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைக்கிறார். காமெடியனாக இருந்து ஹீரோவாக அவதாரமெடுக்கும் சூரி சீமராஜா படத்தில் ஒரு சிறிய காட்சிக்காக சிக்ஸ்பேக் வைத்து நடித்திருப்பார். சூரியின் சிக்ஸ்பேக் புகைப்படம் இணையதளத்தில் மிகப்பெரிய வைரலானது.

அஜித் போன் கால்

அஜித் போன் கால்

சூரியின் சிக்ஸ்பேக்கை பார்த்து பலரும் பாராட்டுக்களை தெரிவித்த நிலையில் நடிகர் அஜித்தும் பாராட்டியுள்ளார். ஒருநாள் திடீரென சிறுத்தை சிவா இடமிருந்து சூரிக்கு தொலைபேசியில் அழைப்பு வந்துள்ளது. அப்போது பேசிய சிறுத்தை சிவா உங்களிடம் அஜித் பேச வேண்டும் என சொல்லியிருக்கிறார். அதைத் தொடர்ந்து பேசிய அஜித்.. வாழ்த்துக்கள் சூரி உங்க சிக்ஸ் பேக் ஸ்டில் பாத்தேன் எப்படி இப்படி வச்சீங்க.. ஒரு கிராமத்திலிருந்து இவ்வளவு தூரம் வந்து இவ்வளவு நாள் சினிமாவுக்கு மெனக்கெட்டு ஒரு சின்ன சீனுக்காக சிக்ஸ்பேக் வெச்சிருக்கீங்க வாழ்த்துக்கள் . என சூரியின் சிக்ஸ்பேக் புகைப்படத்தை பார்த்து மிராண்டு போன அஜித் பாராட்டியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X