பெரிய மனிதர்கள் முன்னிலையில் பிரமாண்டமாக நடந்த அஜீத், த்ரிஷா "திருமணம்"

By Siva

சென்னை: கௌதம் மேனன் படத்திற்காக அஜீத், த்ரிஷா திருமணம் செய்து கொள்ளும் காட்சி படமாக்கப்பட்டது.

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத், அனுஷ்கா, த்ரிஷா நடித்து வரும் படம் தல 55. இது படத்தின் தற்காலிக தலைப்பு ஆகும். இந்த படத்தில் அஜீத் இரட்டை வேடத்தில் வருகிறார்.

படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இரவு

இரவு

படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பெரும்பாலும் இரவு நேரத்தில் தான் நடந்து வருகிறது. இரவு நேரத்தில் தனது காட்சிகள் படமாக்கப்படவில்லை என்றாலும் அஜீத் படப்பிடிப்புக்கு வருகிறார்.

திருமணம்

திருமணம்

படத்தில் அஜீத், த்ரிஷா திருமணம் செய்து கொள்ளும் காட்சி வரும். அதற்காக பிரமாண்ட செட் போட்டு திருமணக் காட்சியை படமாக்கினர். சமூகத்தில் உள்ள பெரிய மனிதர்கள் முன்னிலையில் திருமணம் நடப்பது போன்று காட்சியாக்கியுள்ளனர்.

மகள்

மகள்

கௌதம் படத்தில் அஜீத், த்ரிஷா ஜோடியின் மகளாக மலையாள படமான 5 சுந்தரிகளில் நடித்ததற்காக கேரள அரசின் விருதை பெற்ற அனிகா என்ற குழந்தை நடிக்கிறார்.

வாலிப வயது

வாலிப வயது

இந்த படத்தில் அஜீத் 20 வயது வாலிபராக வருகிறார். இதற்காக மெனக்கெட்டு உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X