Ajith: விடாமுயற்சி அப்டேட் வந்தும் இறங்கி வராத அஜித்... அவரே இப்படி பண்ணலாமா?
சென்னை: ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருந்த ஏகே 62 படத்தின் டைட்டிலை படக்குழு அறிவித்துவிட்டது.
அஜித் பிறந்தநாளில் வெளியான இந்த அப்டேட்டின் படி, ஏகே 62 படத்துக்கு விடாமுயற்சி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இதனால் விரைவில் விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அஜித் இன்னும் படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் இருப்பதாக புகைப்படங்களுடன் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அஜித்தின் விடாமுயற்சி:துணிவு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜித் உடனடியாக அவரது 62வது படத்தில் நடிக்கவிருந்தார். ஏகே 62 என அறிவிக்கப்பட்ட இந்தப் படத்தை லைகா தயாரிப்பில், விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால், திடீரென விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக மகிழ் திருமேனி என்ட்ரி கொடுத்தார்.

அதனால், மார்ச் மாதம் தொடங்கப்பட வேண்டிய ஏகே 62 திரைப்படம் அப்படியே கிடப்பில் இருந்தது. மகிழ் திருமேனி ஸ்கிரிப்ட் செய்யும் வரை டைட்டில் உட்பட எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. இதனால், விரக்தியில் இருந்த ரசிகர்களுக்கு அஜித் பிறந்தநாள் அன்று ஏகே 62 டைட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்தப் படத்துக்கு விடாமுயற்சி என்ற டைட்டில் கன்ஃபார்ம் ஆகியுள்ளது.
இதனையடுத்து விடாமுயற்சி படப்பிடிப்பு உடனடியாக தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏகே 62 ஸ்க்ரிப்ட் வேலைகள் தாமதமாகி வந்ததால், அஜித் பைக்கில் டூர் கிளம்பிவிட்டார். மலேசியா, சிங்கப்பூர் என ரவுண்டு அடித்து வந்த அஜித், தற்போது நேபாளம், பூட்டான் நாடுகளில் வலம் வருகிறார். நேபாளம், பூட்டான் நாடுகளில் அஜித் பைக்கில் டூர் அடித்து வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

விடாமுயற்சி டைட்டில் அப்டேட் வெளியாகியும் இன்னும் படப்பிடிப்பு குறித்து முடிவு செய்யாமல், அஜித் பைக் டூர் சென்றுள்ளது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக ஏகே 62 டைட்டிலுடன் அஜித்தின் மோஷன் போஸ்டரும் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டைட்டிலை மட்டும் வெளியிட்டு சைலண்ட் ஆனது லைகா புரொடக்ஷன்.
மேலும், மே இறுதியில் விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அஜித் ஜாலியாக பைக் டூர் சென்றுவிட்டார். நேபாளம் மலைப் பாதையில் கெத்தாக தனது BMW பைக்கில் ரவுண்டு அடித்து வருகிறார் அஜித். அதுவும் இரவு நேரத்தில் அஜித் பைக் ட்ரிப் அடித்து வருவது அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அஜித் பைக் டூரில் இருப்பதால் விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்க தாமதமாகுமா என்பது குறித்து இன்னும் தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











