“கமல் சார் மாதிரிலாம் வரமுடியாதுன்னு சொன்ன அஜித்": “அஜித் ஒரு ஜென்டில்மேன்னு சொன்ன கமல்”
சென்னை: தமிழ்த் திரையுலகில் நடிகர்கள் கமல்ஹாசன், அஜித்குமார் இருவருக்கும் ரசிகர்கள் அதிகம்.
கமல், அஜித் இருவருமே ரசிகர்களின் தன்னமிக்கை நாயகர்களாக காணப்படுகின்றனர்.
இந்நிலையில், கமல் குறித்து அஜித்தும், அஜித்தை பற்றி கமல்ஹாசனும் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் அடையாளம்
திறமையான கலைஞர்களுக்கு பஞ்சமேயில்லாத தமிழ்த் திரையுலகில், தனித்து நிற்பவர்களில் முக்கியமானவர் நடிகர் கமல்ஹாசன். இவர் நடிகராக மட்டுமில்லாமல் டான்ஸ் மாஸ்டர், பாடகர், கதையாசிரியர், திரைக்கதை ஆசிரியர், இயக்குநர் என இன்னும் பல முகங்களில், கோலிவுட்டை அசரடித்தவர். சமீபத்தில் வெளியான 'விக்ரம்' படம் மூலம் தரமான ஹிட் அடித்து, மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார். இவரை தமிழ் சினிமாவின் அடையாளம் என சினிமா விமர்சகர்கள் கூறுவதுண்டு.

அல்டிமேட் ஸ்டார் அஜித்
அதேபோல், ரசிகர்களால் தல என அன்போடு அழைக்கப்படும் அஜித் குமார், கோலிவுட்டின் மாஸ் ஹீரோவாக வலம் வருகிறார். எத்தனை தோல்விகள் வந்தாலும், அதிலிருந்து மீண்டும் எழும் ஃபீனிக்ஸ் பறவையாக இவரை ரசிகர்கள் புகழ்வது உண்டு. சினிமா மட்டும் இல்லாமல் பைக் ரேஸர், கார் ரேஸர் என இவருக்கும் பல முகங்கள் உள்ளன. சினிமாவில் எந்தவித உதவியும் இல்லாமல் இன்று சிங்கநடை போட்டு வருகிறார்.

கமலும் அஜித்தும் சேர்ந்து நடித்தால்?
கமல், அஜித் என இருவருக்கும் அவர்களது ரசிகர்கள் தான் பெரும் பலமே. ஏனெனில் இவர்கள் வெற்றிப் படங்களை கொடுத்ததைவிட, தோல்வியை தான் அதிகம் கொடுத்துள்ளனர். ஆனாலும், இவர்களது படங்களைப் பார்க்க திரையரங்குகளில் பெருங்கூட்டமே கூடிவிடும். எப்போதும் மாஸ் ஹீரோக்களாக இருக்கும் கமலும் அஜித்தும் இணைந்து ஒருபடத்தில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்தனர். அப்படி இவர்கள் 'தேவர் மகன் 2' படத்தில் சேர்ந்து நடிக்கலாம் எனவும் கூறப்பட்டது.

கமலை புகழ்ந்த அஜித்
சினிமா கேரியரில் கமலுக்கும் அஜித்துக்கும் பல இடங்களில் ஒத்துப் போகும் என ரசிகர்கள் கூறுவதுண்டு. இந்நிலையில், 'சினிமாவில் கமலின் சாதனைகளையும் அவரைப் போன்ற ஒரு உழைப்பு, அர்ப்பணிப்பை என்னால் கொடுக்கவே முடியாது" என அஜித் கூறியுள்ளார். மேலும், "கமல் சார் என அழைக்காமல், அவரை மிஸ்டர் கமல்" என மரியாதையோடு பேசுகிறார் அஜித். சில வருடங்களுக்கு முன்னர் தனியார் தொலைக்காட்சிக்காக அஜித் கொடுத்த பேட்டியில் இப்படி கூறியுள்ளார். இதனை தற்போது ட்ரோல் செய்துவரும் அஜித் ரசிகர்களுக்கு கமல் ரசிகர்களும் ஒரு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர்.

அஜித் ஒரு ஜென்டில்மேன்
அஜித் குறித்து கமல்ஹாசனும் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசியுள்ளார். அதில், "அஜித்துடன் பணிபுரிந்த யாரிடம் கேட்டாலும், அஜித் ஒரு ஜென்டில்மேன்" எனக் கூறுகின்றனர். உண்மையாகவே அஜித் ஒரு ஜென்டில்மேன் தான் புகழ்ந்துள்ளார்" கமல். ஏற்கனவே ரசிகர்களிடம் அதிகம் வரவேற்பை பெற்ற இந்த இரண்டு வீடியோக்களும், தற்போது சமூக வலைத்தளங்களில் இன்னும் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











