“அஜித் சாரை கேட்டதா சொல்லுங்க“ … ரசிகரின் அன்பால் நெகிழ்ந்த ஷாலினி... என்ன செய்தார் தெரியுமா?
சென்னை : அஜித்தின் மனைவி ஷாலினியிடம் ரசிகர் அன்பான வேண்டுகோள் வைக்க அதை அவர் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார்.
தமிழ் திரையுலகில் அனைவருக்கும் பிடித்த நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் அஜித், ஷாலினி ஜோடி.
இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு இன்று வரை கலக்கல் ஜோடிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

வலிமை
போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் கடந்த 24ம் தேதி உலகம் முழுவதும் மாஸாக வெளியாகி இருந்தது. நேர்கொண்ட பார்வை படத்தின் இயக்குனர், எச்.வினோத் இயக்கி உள்ள இப்படத்தில் நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார்.

இசை யுவன்சங்கர் ராஜா
பாடல்களுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, பின்னணி இசையை ஜிப்ரான் அமைத்துள்ளார். இப்படத்தில் இடம் பெற்றுள்ள அம்மா பாடல் அனைவருக்கும் பிடித்த பாடல்களில் ஒன்றாக மாறியுள்ளது. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தில், வில்லன் கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார்.

4 மொழிகளில்
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் வெளியாகி உள்ளது. இதில் கதை, பாடல்கள் என அனைத்தையும் தாண்டி அஜித்தின் பைக் ரேஸ் காட்சிகள் ரசிகர்கள் பலரால் பெரிதும் கொண்டாடப்பட்டது. இந்த படத்தை தியேட்டர் முன் குவிந்த அஜித் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், அஜித்தின் பேனருக்கு பாலாபிஷேகம் செய்தும் கொண்டாடினர். வலிமை திரைப்படம் தற்போது வரை, ரூ 200 கோடி வரை வசூலித்துள்ளதாகவும், தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 136 கோடி ரூபாய் வசூலாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அஜித் சாரை கேட்டதா சொல்லுங்க
இந்நிலையில், வலிமை படத்தை ஷாலினி ரசிகர்களோடு ரசிகராக திரையரங்கில் பார்த்தார். அஜித்தின் எந்த படம் வெளியானாலும் ஷாலினி முதல் ஷோவை பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அதே போல வவிமை படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த ஷாலினியிடம் அஜித்தின் தீவிர ரசிகர் ஒருவர் ஹாய் மேடம் அஜித் சாரை கேட்டதா சொல்லுங்க என்று கூறினார். அந்த கூட்டத்திலும் அந்த ரசிகரை பார்த்து நிச்சயம் சொல்கிறேன் என்பது போல தலையை ஆட்டிவிட்டு சென்றார். தற்போது வெளியாகி உள்ள இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











