Vidaamuyarchi - விடாமுயற்சியில் அஜித் செய்யப்போகும் சம்பவம் இதுவா?.. வெளியான லேட்டஸ்ட் தகவல்

சென்னை: Vidaamuyarchi (விடாமுயற்சி) விடாமுயற்சி படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த துணிவு படம் வெற்றி பெற்றது. இதனையடுத்து தனது 62ஆவது படத்தில் நடிக்கிறார் அஜித்குமார். படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மகிழ் திருமேனி இயக்கும் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். வாரிசுடன் களமிறங்கி துணிவு வெற்றி பெற்றதால் தனது 62ஆவது படத்தையும் ஹிட் படமாக கொடுக்க வேண்டும் என்பதில் அஜித் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது.

Ajith Will Act Dual Role in Vidaamuyarchi Movie 06-07-23

கதைக்கு லேட் ஆனது: இதனை அஜித்குமார் மகிழ் திருமேனியிடமும் கூறியதாகவும் அதனையொட்டிதான் கதையை உருவாக்குவதற்கு அவர் இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டதாக தெரிகிறது. அதேசமயம் படத்தின் பெயரான விடாமுயற்சிக்கு ரசிகர்களில் ஒரு தரப்பினர் விமர்சனத்தை முன்வைக்க, மகிழ் திருமேனியின் கதையும், மேக்கிங்கும் அட்டகாசமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் அஜித் ரசிகர்கள் இருக்கின்றனர்.

வேர்ல்ட் டூர்: அஜித் தனது முதல்கட்ட வேர்ல்ட் டூரை அண்மையில் தொடங்கினார். நேபாளம், பூடான் உள்ளிட்ட பகுதிகளில் ரைட் செய்த அவர் கடந்த 8ஆம் தேதியோடு பயணத்தை முடித்து சென்னை திரும்பியிருக்கிறார். அஜித் இதுவரை எங்கெங்கு பைக்கில் சென்றிருக்கிறார் என்ற புகைப்படத்தை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். அதேபோல் அஜித் தனது அடுத்தக்கட்ட சுற்றுப்பயணத்தை நவம்பர் மாதம் தொடங்குவார் எனவும் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார்.

விடாமுயற்சியில் பிரச்னை: இந்தச் சூழலில் மே 22ஆம் தேதி விடாமுயற்சி ஷூட்டிங் சென்னையில் பூஜையுடன் தொடங்கவிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இடையில் லைகாவில் நடந்த அமலாக்கத் துறை சோதனை காரணமாக அஜித் லைகாவுக்கு பதில் வேறு ஒரு நிறுவனத்துக்கு விடாமுயற்சி படத்தில் நடிக்கலாம் என்ற யோசனையில் இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அதில் உண்மையில்லை லைகா நிறுவனத்திடம் அவர் 40 கோடி ரூபாய்வரை அட்வான்ஸ் வாங்கிவிட்டார் எனவே லைகாவுக்குத்தான் விடாமுயற்சியில் நடிப்பார் என திரைத்துறை வட்டாரம் கூறுகிறது.

லேட்டஸ்ட் கெட்டப்: சூழல் இப்படி இருக்க இயக்குநர் மகிழ் திருமேனியுடன் லொகேஷன் பார்ப்பதற்காக அஜித் வெளிநாடு சென்றுவிட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து வெளிநாட்டில் இருந்தபடி அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகின. அந்தப் புகைப்படத்தில் அஜித் பயங்கர ஃபிட்டாக இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே இதுதான் விடாமுயற்சி கெட்டப்பா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பிவந்தனர்.

இரட்டை வேடம்; இந்நிலையில் விடாமுயற்சி படம் குறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிக்கவிருக்கிறார் என கூறப்படுகிறது. அஜித் இதுவரை இரட்டை வேடங்களில் நடித்ததில் அசல் படத்தை தவிர்த்து மற்ற படங்கள் ஹிட்டாகியிருப்பதாலும், மகிழ் திருமேனி தடம் என்ற படத்தில் அருண் விஜய்யை இரட்டை வேடத்தில் அருமையாக காட்சிப்படுத்தியிருந்ததால் இந்தப் படத்திலும் ஏதேனும் ஒரு வித்தியாசம் இருக்கும் எனவும் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X