Vidaamuyarchi - விடாமுயற்சியில் வி சென்ட்டிமென்ட் மட்டுமில்லை இதுவும் இருக்கா?.. லேட்டஸ்ட் தகவல் இதோ

சென்னை: Vidaamuyarchi (விடாமுயற்சி) விடாமுயற்சி திரைப்படத்தில் வி சென்ட்டிமென்ட் மட்டுமின்றி இன்னொரு செண்ட்டிமெண்ட்டும் இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்கவிருக்கிறார் அஜித்குமார். துணிவு தந்த வெற்றியால் இந்தப் படத்தை மெகா ஹிட்டாக்கிட வேண்டும் என்ற முனைப்பில் அஜித் இருக்கிறார். இதற்காக மகிழ் திருமேனியிடம் தரமான கதையை தயார் செய்ய சொல்லி அளவுக்கு அதிகமாகவே நேரம் கொடுக்கப்பட்டது. மகிழ் திருமேனியும் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என நினைத்து கதையை பார்த்து பார்த்து மெருகேற்றியிருக்கிறார்.

 Ajith Will Act Dual Role in Vidaamuyarchi Movie

கதை கேட்கும் அஜித்: மகிழ் திருமேனி சொன்ன ஒன்லைனை மட்டும் கேட்டுவிட்டு அஜித் தனது வேர்லட் டூருக்கு கிளம்பிவிட்டார். இப்போது தனது முதல்கட்ட சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பியிருக்கிறார் அஜித். விரைவில் மகிழ் திருமேனியிடம் முழு கதையையும் கேட்கவிருப்பதாக கூறப்படுகிறது. அதன் பிறகு ஷூட்டிங்கில் கலந்துகொள்ளும் அவர் தனது இரண்டாவது கட்ட சுற்றுப்பயணத்தை நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் செய்யவிருக்கிறார்.

எப்போது ஷூட்டிங்: விடாமுயற்சி ஷூட்டிங் மே 22ஆம் தேதி தொடங்கவிருப்பதாக தெரிகிறது. பூஜையுடன் தொடங்கும் படப்பிடிப்பில் முதலில் அஜித்தின் போர்ஷனை முடித்துவிட மகிழ் திருமேனி திட்டமிட்டிருக்கிறாராம். அஜித்தும் முழு ஒத்துழைப்பு கொடுத்து நடிக்க ஆர்வமாக இருக்கிறார். இயக்குநர் இப்போது லொகேஷன் தேடும் பணியில் தனது டீமுடன் ரொம்பவே பிஸியாக இருக்கிறார்.

யார் ஹீரோயின்?: இதற்கிடையே படத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கு பாலிவுட்டில் ஐஸ்வர்யா ராய், கங்கனா ரணாவத், கத்ரீனா கைஃப், கரீனா கபூர் ஆகியோரிடமும், தமிழிலிருந்து த்ரிஷாவிடமும் பேச்சுவார்த்தை நடத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இருப்பினும் விடாமுயற்சி படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிப்பதற்கே வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கோடம்பாக்கத்தில் பேச்சு பலமாகவே எழுந்திருக்கிறது.

 Ajith Will Act Dual Role in Vidaamuyarchi Movie

வி சென்ட்டிமென்ட்: அஜித் - மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகும் படத்தின் பெயரை ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்திருந்தனர். மீகாமன், தடையற தாக்க என ரொம்பவே அழகாக பெயர் வைக்கும் மகிழ் திருமேனி விடாமுயற்சி என வைத்து தங்களை ஏமாற்றிவிட்டார் என்று ரசிகர்கள் கூறினர். ஆனால் வாலி, வில்லன், வரலாறு, விவேகம், வேதாளம், விஸ்வாசம் என வி சென்ட்டிமென்ட்டில் அஜித்துக்கு விருப்பம் இருப்பதால் அவர்தான் இப்படி வைக்க சொல்லியிருப்பார் என ரசிகர்களில் ஒரு தரப்பினர் கூறினர்.

வி சென்ட்டிமென்ட் மட்டும் இல்லை: இந்நிலையில் விடாமுயற்சி படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தப் படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிக்கவிருக்கிறார் என கூறப்படுகிறது. இதுவரை அஜித் இரட்டை வேடங்களில் நடித்த வாலி, வில்லன், வரலாறு, அட்டகாசம், பில்லா போன்ற படங்கள் மெகா ஹிட்டாகியிருப்பதால் அந்த செண்ட்டிமெண்ட்படி விடாமுயற்சியும் மெகா ஹிட்டாகும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X